22.2.11

காக்ளியாவற்ற கருணம்



நான்கு வழிச்சாலையில் 
பயணித்தேன் 

சில ஊர்கள் 
மறைந்தே போயின 

ஓர தேநீர் கடைகளின் 
சுவடுகள் இல்லை 

வீடுகளின் முதல் மாடி
தரைத்தளமாய்

காடுகளின் தடங்கள்
கரைந்திருந்தது  

பயணம் என்னவோ 
சுகமாய்த்தான்  இருந்தது 

குடிசையிழந்தோரின்
கூக்குரல் மட்டும் கேட்கவே இல்லை 
காக்ளியாவற்ற கருணத்தால்.............


23 comments:

மதுரை சரவணன் said...

எப்படிங்க இப்படி கவிதை தானா வருது.. எளிமை இனிமை. வாழ்த்துக்கள்

அன்புடன் நான் said...

கவிதை ஒரு பாதையில் சென்றாலும்.... கடைசி வரி அதான் கவிதையின் தலைப்பு புரியல... அதனால முழு கவிதையும் என்னன்னு தெரியல....

விஜய் said...

@ மதுரை சரவணன்

வருகைக்கு நன்றி நண்பா

உங்க ஊருக்கு நேற்று வந்துவிட்டு திரும்பும்போது தோன்றிய கவிதை நண்பா

நன்றி

விஜய்

விஜய் said...

@ அரசு

காக்ளியாவென்றால் செவியின் ஒரு பகுதி நண்பா

கருணம் என்றால் காது

ஈழ ஓலம் கேட்க மறுத்த காதுகளும் இதே ரகம்தான்

நன்றி நண்பா

சந்தான சங்கர் said...

அகல வழி சாலையெங்கும்
அகல மறுக்கும் வீட்டு சுவடுகள்


நல்லாருக்கு நண்பா

சத்ரியன் said...

விஜய்,

கேக்”காது” தான்!

ஸ்ரீராம். said...

கேட்காத காதுகள்...அருமை விஜய்...

Thenammai Lakshmanan said...

ரொம்ப யதார்த்தம் அருமை விஜய்..

arasan said...

மிக ரசித்தேன் சார் ....

விஜய் said...

@ சந்தான சங்கர்

நலமா நண்பா ?

கவிதை பின்னூட்டம் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ சத்ரியன்

நலமா நண்பா ?

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

மிகுந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ தேனக்கா

அலுவலுக்கிடையில் வாழ்த்தியமைக்கு நன்றி அக்கா

விஜய்

விஜய் said...

@ அரசன்

ரசித்தமைக்கு மிகுந்த நன்றி நண்பா

விஜய்

Kala said...

விஐய். நான் காதுகொடுத்துக்
கேட்டேன் உங்கள் கவியின்
கூவாக்...கூவாவென்னும் சத்தத்தை
கண்ணிருந்தும் குருடாய்...
காதிருந்தும் செவிடாய்...
வாயிருந்தும் ஊமையாய்...
வாழும் புள்ளிகளை
மக்கள் கோட்டுடன் இணைத்துக்
கோலம் போடும் நாள்வருமா??

விஜய் said...

@ கலா

புள்ளி வைக்காமலே கோலம் போட உங்களால் தான் முடியும் !!!!

நன்றி

விஜய்

பாரி தாண்டவமூர்த்தி said...

ஐயா தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்...

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி

http://blogintamil.blogspot.com/2011/03/1.html

விஜய் said...

@ பாரி

நெஞ்சார்ந்த நன்றி நண்பா.

இவ்வலையில் மற்றுமொரு நண்பர் கிடைத்தமைக்கு கடவுளுக்கு நன்றி

விஜய்

Anonymous said...

கவிதை அருமை. கவிதை வரிகள் செல்லும் பாதை தெளிவாய் தெரிகிறது முடியும் இடத்தைத் தவிர.

விஜய் said...

@ புலி

நன்றி நண்பா முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

விஜய்

கவிநா... said...

காக்ளியாவற்ற கருணம்.... இந்த முறை பொருளுணர்ந்து கவிதை படிக்க வாய்ப்புக் கிடைத்தது அண்ணா....

உங்கள் கருணத்தில் கேட்ட கூக்குரல், கவிதையாய் விரிந்திருக்கிறது.

நன்று அண்ணா....

விஜய் said...

@ காயு

நன்றி தங்காய்

விஜய்

Unknown said...
This comment has been removed by the author.