27.12.12

போட்டிக்கு அனுப்பிய பாடல்

நான் படத்தில் தப்பெல்லாம் தப்பே இல்லை பாட்டுக்காக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி போட்டி வைத்திருந்தார். அதற்காக நான் எழுதிய சரணங்கள்.
1)
பாயும் புது ரத்தமிங்கு 
சாயும் பல சிங்கமிங்கு 
உடல்மொழி உருவத்தை உயர்த்திவிடு 

பாடும் கிளி வண்ணச்சிந்து
தேடும் இள நெஞ்சைக்கண்டு 
இலைமறை இதயங்கள் இணைத்துவிடு 

பூக்காடே வாழ்வென்றும் தீக்காடே 
பாரெங்கும் சீக்காடே  
சாகட்டும் சாக்காடே 

தேனூற்றி  மூளைக்குள் தீமூட்டி 
பூமிக்குள் நீரூற்றி
செய்யட்டும் அரசாட்சி ...........

2)
பூமி பல வண்ணப்பந்து
வாநீ புது எண்ணம் சிந்து
விரல்நுனி அசைவினில் சுருக்கிவிடு  
நாளை விடியட்டும் நல்ல
வேளை திசையெட்டும்  வெல்ல
உனதுயிர் உதிரத்தை உசுப்பிவிடு

நானல்ல நானன்றி நீயல்ல 
நீயன்றி நானல்ல 
நாமன்றி வேறல்ல 

காம்பல்ல பூவுக்குள் தேனல்ல
கீழோடும் வேரல்ல
வித்தன்றி வாழ்வேது ............

2 comments:

Prem Kumar.s said...

//நானல்ல நானன்றி நீயல்ல
நீயன்றி நானல்ல
நாமன்றி வேறல்ல //

வார்த்தை விளையாட்டு கலக்கல் அன்பரே !

ஸ்ரீராம். said...

நான் இந்தப் பாடல் கேட்டதில்லை என்பதால் சந்தத்துக்குப் பொருந்துகிறதா என்று முணுமுணுக்க முடியவில்லை!