22.1.13

நிகழ்காலம்


கோவிலுக்கு போனால் 
செருப்பு நினைவு 

சினிமாவுக்கு சென்றால் 
பூட்டின் சந்தேகம் 

சுற்றுலா வந்தால் 
அடுத்த மாத கடன் 

நேற்றோ நாளையோ 
எண்ணி 
நிகழ்காலத்தை 
தொலைக்கிறது 
மனது 

2 comments:

அமர பாரதி said...

நிதர்சன கவிதை.

ஸ்ரீராம். said...

நேற்றைய கவலைகளில் மட்டுமில்லாமல், நாளைய எதிர்பார்ப்புகளிலும் இன்றைத் தொலைக்காமல் இருப்பது நல்லதுதான்.