விதையின் தாய்ப்பால் சிப்பிக்கு முத்து இயற்கையின் சட்ஜமம் மரங்களின் தலைதுவட்டல் நீர்நிலைகளின் சக உதிரம் இலைகளின் குருப்பு கடவுளின் எச்சில் கிணற்றின் கொப்பூழ் இயற்கையின் துப்புரவு குழந்தைகளுக்கு அனிச்சை ஆச்சர்யம் காதலர்க்கு மெல்லிசைக்காமம் மயிலுக்கு துணை கவர்தல் தவளைக்கு சங்கீத மேடை முதிர்கன்னிக்கு பெருமூச்சு விவசாயிக்கு வைப்பு நிதி நடை பாதை வியாபாரிக்கு சனியன் இயற்கை சிதைவால் பருவம் வந்தும் பூப்படையா மழை தன்னை மட்டுமே உண்ணும் சாதக பட்சிகளை தேடிக்கொண்டிருக்கிறது மழைத்துளி விஜய்
ஞாபக ஒட்டடைகளை சற்றே விலக்கிப் பார்த்தால் நீ மட்டுமே தெரிகிறாய் கருவிழிக்குள் நூறு கவிதைக்கான கரு நாசிக்கை எழுதி வாங்கும் நாசி ரோஜாவின் உதிரமொத்த அதரம் கருப்பையொத்த காதுகளில் ஜிமிக்கி குழந்தைகள் திருஷ்டி போட்டு வைக்கும் கன்னக்குழி வெண்பஞ்சு பாதம் தாங்கும் முத்துக்கொலுசு ஓரக்கண்ணால் பார்த்து இதழோரம் புன்முறுவாய் பெண்மையின் துல்லிய சுகந்தத்துடன் எனைக் கடப்பாய் ஆறு பௌர்ணமிகளில் தொலைந்த நிலவே எங்கு இருக்கிறதோ உன் வானம்.........................