12.1.10

கல்வி கவிச்சைசோளக்காடுகளில்  முளைத்த 
காங்கிரீட் சதுரக்கேடுகள் 

சிறகுகளின் சிரசில் 
கல்விப்பூசணி 

முதுகு வளைக்கும் 
பாட பாரங்கள் 

பால்குடி மறக்குமுன் 
அஜீரண கவிச்சைகள் 

கத்தைப்பண சுற்றால்
காது தொடாமலனுமதி 

பெற்றோர் பாசமற்று
பிள்ளை வளர்க்கும் ஊட்டி

பணந்தின்னி பள்ளிகள் முன் 
ஆங்கில பித்தால் 
இரையான எறும்புக்கூட்டங்கள்

இயந்திர திறவுகளால்
அரக்கிடப்பட்ட கற்பனைகள் 

விழுதுகளின் வேரில் 
திராவகமூற்றி 
விருட்ஷம் வளர்க்கும் 
செப்படி வித்தை 

விளையாட்டுகள் மறைந்து 
வளரும் ஜுவனைல் டயபடீஸ் 

தடித்த நியுரான்களின் 
மடித்த இடைவெளியில் 
மரித்த ஹாஸ்யங்கள் 

அறிவு பெருக்கி 
உறவு சுருக்கும் 
உன்மத்த உபதேசங்கள் 

ஆகாத கல்வியால் 
ஆண்டுகள் வளர 
ஆதரவற்றோர்
ஆயிரக்கணக்கில் 

ஒழிக மெக்காலே 

அனைவருக்கும் எனது இதயங்கனிந்த 
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் 


40 comments:

ஹேமா said...

அச்சோ....அச்சோ நான்தான் இந்தமுறை முதல்.யாரும் வராதீங்கப்பா.ரொம்பக் காலமாச்சு விஜக்கு முதல் முதல் பின்னூட்டம்...!

ஹேமா said...

விஜய்...ஏம் தமிழ்மண ஓட்டுப் போடமுடில.காணலயே !

//விழுதுகளின் வேரில்
திராவகமூற்றி
விருட்ஷம் வளர்க்கும்
செப்படி வித்தை//

இன்றைய குழந்தைகளின் முதுகில் திணிக்கும் பாரங்கள் கல்வி என்கிற பெயரில்.பெற்றோரின் கறபனை.
எதிர்காலக் கற்பனை வாழ்வு என்கிற பெரிய பாரம் அவர்களின் குழந்தைத்தனதையே தின்றுவிடுகிறது.உங்கள் குழந்தைகளால் இந்தச் சிந்தனை உங்களுக்குப் பாரமாகிறது விஜய்.என்ன செய்யலாம்.
காலத்தோடுதானே நாமும்.

உங்களுக்கும் உங்கள் துணைக்கும் சின்னக் குட்டிகளுக்குக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

விஜய் said...

என்னை வழிப்படுத்தி ஊக்குவித்து சுமாராக நானும் கவிதை எழுதுகிறேன் என்றால் அதற்க்கு முழு முதல் காரணம் நீங்கள்தான்.

முதன்முதலில் நான் எழுதிய கவிதையை படித்து நீங்கள் எழுதிய பின்னூட்டம் இன்னும் என் இதயத்தில் பசுமையாக இருக்கிறது

மிக மிக நன்றி சகோதரி

விஜய்

விஜய் said...

தமிழ்மணம் ஓட்டுப்பெட்டி இன்னும் வைக்கவில்லை ஹேமா

எனது மனங்கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்களினிய குடும்பத்தினருக்கும்

விஜய்

சந்தான சங்கர் said...

கலவியிட்டு
கரு சுமந்தாய்
கருணையாய் நான் பிறந்தேன்
கல்வியிட்டு
பொதி சுமக்க
கருணை நீ பிறழ்ந்தாயோ!!பொங்கல் வாழ்த்துக்கள் நண்பா..

புலவன் புலிகேசி said...

நானும் சொல்கிறேன் ஒழிக மெக்காலே...இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா

thenammailakshmanan said...

//கத்தைப்பண சுற்றால்
காது தொடாமலனுமதி

பெற்றோர் பாசமற்று
பிள்ளை வளர்க்கும் ஊட்டி/

இரண்டுமே மிக அருமை விஜய் ஊட்டிதான் சிலேடையாகவும் நல்லாவும் இருக்கு

thenammailakshmanan said...

//விளையாட்டுகள் மறைந்து
வளரும் ஜுவனைல் டயபடீஸ்

தடித்த நியுரான்களின்
மடித்த இடைவெளியில்
மரித்த ஹாஸ்யங்கள்//

இப்படி எல்லாம் உண்மையிலேயே நடக்கிறது விஜய்

உங்க கூர்ந்த அவதானிப்பில்சுருக்கமான வார்த்தைகளில் நல்லா சுருக்குனு சொல்லி இருக்கீங்க

விஜய் said...

நன்றி சங்கர்

பொங்கல் வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

விஜய் said...

@ புலவன் புலிகேசி

நன்றி தம்பி

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

விஜய்

விஜய் said...

@ தேனக்கா

தங்களது பின்னூட்டம் எப்பொழுதும் எனக்கு பின்னூக்கம் தான்

தங்களுக்கும் தங்களது இனிய குடும்பத்தினருக்கும் மனங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்

விஜய்

பலா பட்டறை said...

பெற்றோர் பாசமற்று
பிள்ளை வளர்க்கும் ஊட்டி//
அறிவு பெருக்கி
உறவு சுருக்கும்
உன்மத்த உபதேசங்கள்

ஆகாத கல்வியால்
ஆண்டுகள் வளர
ஆதரவற்றோர்
ஆயிரக்கணக்கில் //

அசத்திட்டீங்க விஜய்...வாழ்த்துக்கள்..::))

Anonymous said...

எந்த வரியை பாராட்டுவது விஜய் நிதர்சணத்தை கவிதையாய் சொல்லியிருக்கீங்க...இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

விஜய் said...

@ பலா பட்டறை

மிகுந்த நன்றி நண்பரே

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

விஜய்

விஜய் said...

@ தமிழ்

நன்றி சகோதரி

தங்களுக்கும் தங்களின் இனிய குடும்பத்தினருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

விஜய்

சுந்தரா said...

//சிறகுகளின் சிரசில்
கல்விப்பூசணி

முதுகு வளைக்கும்
பாட பாரங்கள்

பால்குடி மறக்குமுன்
அஜீரண கவிச்சைகள் //

அருமை... ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.

உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். said...

பாட பாரங்கள், காது தொடா அனுமதி, பிள்ளை வளர்க்கும் ஊட்டி, விழுதுகளில் திராவகம், ஜுவனைல் டியாபடிஸ் (இது இன்னும் விசேஷமாக பாராட்டப் பட வேண்டிய அவதானம்) அறிவு பெருக்கி, உறவு சுருக்கி, மரித்த ஹாஸ்யம்....

பிரமாதம் விஜய்..

ஒழிக மெக்காலே தான்...

ஆனால் நாம் எல்லோருமே அதன் தவிர்க்க முடியாத அடிமைகள்தான்..

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

விஜய் said...

@ சுந்தரா

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி

மனதார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

அன்பு நண்பா

தங்களது வெளிப்படையான விமர்சனமும் பாராட்டும் எனை கவர்ந்த ஒன்று

மிகுந்த நன்றி

என் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

விஜய்

Kala said...

நாகரீகம்,நாகரீகம் என்று
நாகரீகம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது....

{இப்போது}படிப்பு,படிப்பு என்று பிள்ளைகளுடன்
பெற்றோரும் பதறியடிப்பது பரிதாபம்

ஆற்றாமையின் எழுத்து வடிவம்
சிந்திக்கத் தூண்டட்டும்!!நன்று நன்றி.

உங்களுக்கும், ,உங்கள்குடும்பத்தார் அனைவருக்கும்
எனது அன்பான தைத்திருநாள் வாழ்த்துகள்.

விஜய் said...

@ கலா

நன்றி சகோதரி தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மனம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

விஜய்

சி. கருணாகரசு said...

ஒழிக மெக்காலே //

புரியல//

மற்றபடி சமூதாய சிந்தனை அருமை.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

விஜய் said...

@ அரசு

மெக்காலே என்கிற ஆங்கிலேயன் வகுத்த கல்விமுறையை தான் நாம் இன்னும் பின்பற்றி வருகிறோம் நண்பா

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

விஜய்

ஆ.ஞானசேகரன் said...

பொங்கல் தின வாழ்த்துகள் நண்பரே

விஜய் said...

நன்றி நண்பா

விஜய்

பாலா said...

மன்னிக்கணும் அண்ணா லேட்டா வந்துட்டேன்
கவிதை அருமை
நல்லா இருக்குண்ணா

விஜய் said...

@ பாலா

நமக்குள்ள எதுக்கு மன்னிப்பு தம்பி

நன்றி

விஜய்

கமலேஷ் said...

மிகவும் அழகான சமூக சிந்தனை உள்ள ஒரு கவிதை...ரொம்ப நல்லா இருக்குங்க....

விஜய் said...

நன்றி கமலேஷ்

விஜய்

சந்தான சங்கர் said...

முடியாமற் போன கணங்களிலும்
நகர்கின்றேன் உன்னைநோக்கி
நத்தையிட்ட ஈரம்போல்
உன் நட்பை சிந்திக்கொண்டு..

வாழ்த்துக்கள் தோழி..

சந்தான சங்கர் said...
This comment has been removed by the author.
Sivaji Sankar said...

வணக்கம் அண்ணே.. ரொம்ம்ம்ப லேட் ஆயிடிச்சி...
கவிதை நல்லாருக்கு அண்ணே...

விஜய் said...

நன்றி தம்பி சங்கர்

விஜய்

அன்புடன் மலிக்கா said...

/கத்தைப்பண சுற்றால்
காது தொடாமலனுமதி/

நானும் இதை வைத்து ஒன்று எழுதலாமென்றிந்தேன் சகோதரரே சூப்பர் அருமையான வரிகள்..

விஜய் said...

நன்றி சகோதரி

இதைதான் ஒத்த சிந்தனை என்பது

விஜய்

சத்ரியன் said...

//அறிவு பெருக்கி
உறவு சுருக்கும்
உன்மத்த உபதேசங்கள் //

விஜய்,

செம “டச்” மக்கா.

விஜய் said...

நன்றி நண்பா

உங்கள் அன்பு டச்சுக்கு


விஜய்

ram_goby said...

nice one vijay

ram_goby said...

i enjoy ur all poems..

விஜய் said...

Thanks Gopi

Vijay