14.2.10

காதல் விருதுஉன் எச்சில் பட்டு
நெஞ்சணைத்த
உயிரியல் புத்தகம்

சோர்ந்து சுவடிழந்த நேரத்தில்
முகர்ந்து சிலிர்த்த
கைக்குட்டை

கைரேகைப்பக்கமும்
குரலிசை நாடாவும்

இவையனைத்துமெனது
சேமிப்புப்பெட்டகத்தில்
தொல்பொருளாய்

படமெடுத்த நிக்கானுக்கு தெரியும்
என் விழிகளின் காதல் தவிப்பை

கீட்டாமைன் கண்கள்
தந்த தீரா நோய்
ஃபிலோபோபியா

கடுங்குளிரில் உன்னையே
போர்த்திய பெண் பேகன் நீ


நீ தொட்டு விளையாடிய 
உன் மடிக்கணினி நான்

ஹேர்ப்பின் வளைவுகளில்
விழுந்து நெளிந்தவன்
இன்னுமெழவில்லை

ஃபேர்அண்ட்லவ்லியும்
உனது வியர்வையும்
கலந்த சுகந்தம்
இந்நாள்வரை
வேறெங்கும் நுகர்ந்ததில்லை

உன்னிதழ்களில்
வாசித்த மோர்சிங்
இன்னுமென்
ஜீவனின் ஜீகல்பந்தியாய்

நான் விரும்பி
நீ குத்திய
மூக்குத்தி
நோஸ்டால்ஜிக் வலிகள்

இதய எக்ஸ்ரேக்களை
நான் அனுமதிப்பதில்லை
கதிர் வீச்சு
உனக்காகாதென்பதால்

ஆழ்மன டீட்டா நிலையில்
பதிந்த உன்னை
ஆல்பா நிலையில்
நிறுத்தியிருக்கிறேன்

நானும் நீயும்
அவரவர் வீட்டில்
அழகாய் வாழ்கின்றோம்
தோற்ற காதலருலகின்
செவாலியே சிவாஜிக்களாய்.........................

44 comments:

ஜீவன் said...

///ஹேர்ப்பின் வளைவுகளில்
விழுந்து நெளிந்தவன்
இன்னுமெழவில்லை///

கவிதை அருமை...!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

என்ன தல சொல்லவே இல்ல :))
செவாலியே விஜய் வாழ்க:))

வாழ்த்துகள்.:)

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்குங்கண்ணா..உங்களுக்கும் வாழ்த்துக்கள்

Sivaji Sankar said...

//கடுங்குளிரில் உன்னையே
போர்த்திய பெண் பேகன் நீ//

அட்டகாசமா இருக்கு அண்ணா.. காதலர் தின வாழ்த்துக்கள் உங்களுக்கும் அண்ணிக்கும்.. :)

ஸ்ரீராம். said...

அதானே...
விஜய் கவிதை இல்லாமல் காதலர் தினமா?
காதலும் அறிவியலும் உணர்வியலும் கலந்த கவிதை.
பிடித்த நபர்கள் என்றால் வியர்வை கூட மணம்தான்...
அதென்ன,
ஜெயித்த காதலில் சுகமே இல்லையா?

ரிஷபன் said...

அத்தனை வரிகளுமே காதலின் சுகந்தம்..

Kala said...

மனையாளின் மனத்திடம்..
உங்கள் மனம் புகுந்து பேட்டி
எடுத்தவைகள்..காதலர் தினத்தில்..
தளத்தில் ....அன்பும்,பாசமும்
புரிந்துணர்வும் கொண்ட கணவனாய்!!

நன்றி விஜய்
என் அன்பான அன்பர்தின வாழ்த்துகள்
குடும்பத்தார் அனைவருக்கும்.

ஹேமா said...

காதல்ன்னு தலைப்பு எடுத்தாலே எல்லாருக்குள்ளயும் ஒரு கதை இருக்கும்.அழகான உணர்வு விஜய்.என் அன்பின் வாழ்த்துகள்.

Madurai Saravanan said...

sevaaliye sivaajiyaay naalla karpanai varikal. ithu natippalla umai thaane kavithai aurmai. vaalththukkal

விஜய் said...

@ ஜீவன்

வாழ்த்துக்கு நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ ஷங்கர்

குடும்பத்துக்கள் குட்டி கலாட்டா உண்டு பண்ணிடாதீங்க நண்பா

நன்றி

விஜய்

விஜய் said...

@ புலவன் புலிகேசி

மிகுந்த நன்றி தம்பி

விஜய்

விஜய் said...

@ சிவாஜி சங்கர்

மிகுந்த அன்பும் நன்றியும் என் அருமை தம்பிக்கு

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

நமக்கு காதல் அனுபவமே இல்லை, ஆகவே தோற்ற மாதிரி ஒரு கற்பனை

மனம் திறந்த வாழ்த்துக்கு மிகுந்த நன்றி ஸ்ரீராம்

விஜய்

விஜய் said...

@ ரிஷபன்

மிக மிக மகிழ்வு நண்பா, தங்கள் வாழ்த்துக்கு

விஜய்

விஜய் said...

@ கலா

தங்களின் வெளிப்படையான கருத்துகளையும் வாழ்த்துகளையும் நான் மற்றவர் பதிவுகளிலும் தேடி தேடி படிக்கிறேன்.

நீங்கள் ஏன் வலைப்பக்கம் ஆரம்பிக்கவில்லை ?

தங்களின் வாழ்த்துக்களை தலைவணங்கி ஏற்றுகொள்கிறேன்.

விஜய்

விஜய் said...

@ ஹேமா

நீங்கள் பாராட்டாமல் நான் எப்படி இத்தனை கவிதைகள் எழுதி இருக்க முடியும் ?

தங்களின் வாழ்த்துக்கு என்றும் நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.

விஜய்

விஜய் said...

@ மதுரை சரவணன்

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி நண்பா.

அடிக்கடி வருக

விஜய்

தியாவின் பேனா said...

அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் .

விஜய் said...

@ தியாவின் பேனா

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே

விஜய்

கமலேஷ் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு...படம் ரொம்ப திகிலா இருக்கு...வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

thenammailakshmanan said...

//கடுங்குளிரில் உன்னையே
போர்த்திய பெண் பேகன் நீ

நீ தொட்டு விளையாடிய
உன் மடிக்கணினி நான் //

இது ரொம்ப அருமையாவும் வித்யாசமாகவும் இருக்கு ... ரிஷபன் சொன்னபடி காதலின் சுகந்தம் எல்லா வரிகளிலும்... செவாலியே நம்மனங்களைக் கொள்ளை கொண்டவர் அல்லவா விஜய்... அவருக்கு தோல்வி ஏது ..?

தமிழரசி said...

புது வடிவில் பிணையப்பட்ட காதல் கவிதை....

நானும் நீயும்
அவரவர் வீட்டில்
அழகாய் வாழ்கின்றோம்
தோற்ற காதலருலகின்
செவாலியே சிவாஜிக்களாய்.........................


சான்ஸேயில்லைங்க விஜய்...இக்கவிதைகளுக்காகவே காதல் தோன்றியதோ என்னவோ?

Kala said...

இம்புட்டு ரசிகனா?ஓஓ...நன்றி விஜய்!
கருத்துக் கந்தசாமி போய்....
கருத்துக் கலாவாக்கிவிட்டீர்களா?

ஏஏஏ...புள்ள உங்க மாமா... கருத்து தேடித்தேடித்
திரிகிறாகளாம்!!


கவனம் விஐய்.. கருத்தொருமித்தவர் கருத்தாய்க்...
கவனித்து

கருத்துத் தேடுவதை கத்தரித்து விடுவார்.

ரொம்ப..........தாங்க முடியல்ல...இல்ல..

எனக்கும் ஒரு ரசிகர் உண்டுஉஉஉஉஉஉஉஉ
நன்றி விஜய்

விஜய் said...

@ கமலேஷ்

வாழ்த்துக்கு மிகுந்த நன்றி கமலேஷ்

விஜய்

விஜய் said...

@ தேனக்கா

சிவாஜியை போல் அழகாக நடித்து வாழ்கிறோம் என்றே சொல்லியிருக்கிறேன் அக்கா

வாழ்த்துக்களுக்கு நன்றி

விஜய்

விஜய் said...

@ தமிழ்

ரொம்ப நன்றி சகோதரி

(நீங்க புகழ்ந்த அளவுக்கு நான் தகுதி உடையவன்தானா என்று எனக்கு தெரியவில்லை)

உங்களது மிகுந்த அன்பின் வெளிப்பாடாக எடுத்துகொள்கிறேன்.

விஜய்

விஜய் said...

@ கலா

நன்றி

இவண்
தலைவர்
அகில உலக பின்னூட்ட சுனாமி "கருத்து கலா" ரசிகர் மன்றம்

நினைவுகளுடன் -நிகே- said...

அருமை அழகு
வாழ்த்துகள்.:

விஜய் said...

@ நிகே

தங்களது முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி

விஜய்

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//ஃபேர்அண்ட்லவ்லியும்
உனது வியர்வையும்
கலந்த சுகந்தம்
இந்நாள்வரை
வேறெங்கும் நுகர்ந்ததில்லை//

ப்ளாக்ல நான் படிச்சதுலேயே வெச்சு அருமையான கவிதை..

உண்மை..

நன்றி..

விஜய் said...

@ பிரகாஷ்

தங்களின் முதல் வருகைக்கும் மனதார்ந்த பாராட்டுக்கும் மிகுந்த நன்றி நண்பா

விஜய்

சி. கருணாகரசு said...

இப்பவுமா அந்த நினைவுகளை பத்திரபடுத்தி வைத்திருக்கிங்க.... கவிதை நிறைய உண்மை பேசுதுங்க.

சத்ரியன் said...

விஜய்,

//கடுங்குளிரில் உன்னையே
போர்த்திய பெண் பேகன் நீ//

//ஃபேர்அண்ட்லவ்லியும்
உனது வியர்வையும்
கலந்த சுகந்தம்
இந்நாள்வரை
வேறெங்கும் நுகர்ந்ததில்லை//

வசீகரித்த வரிகள் மக்கா.

அதுவும் கவிதையின் கடைசி வரி..... அத்தனைப் பொருத்தம் போ.

அன்புடன் மலிக்கா said...

வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்..

விஜய் said...

@ அரசு

மிக்க நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ சத்ரியன்

ரசித்து ருசித்து வாழ்த்தியதற்கு மிகுந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ மலிக்கா

மிகுந்த நன்றி சகோதரி

விஜய்

Jaleela said...

உங்கள் மகன் பள்ளி மாறு வேட போட்டியில் ஈஷா முகம்மது வேடம் போட்டு முதல் பரிசு வாங்கியது ரொம்ப சந்தோஷம், அப்படியே அந்த போட்டோவை போட்டு பதிவு போட்டீங்கனா நல்ல இருக்கும். நானும் பார்த்து என் தங்கை குழந்தைகள் தான் அடிக்கடி மாறுவேட போட்டிகளில் கலந்து கொள்வார்கள் அவர்களுக்கும் சொல்லாம்.


இரண்டு முறை வந்தேன் பதிவுகளை படித்தேன், உடனே பதில் போடமுடியல

///ஹேர்ப்பின் வளைவுகளில்
விழுந்து நெளிந்தவன்
இன்னுமெழவில்லை//

கவிதை வரிகள் அனைத்து அருமை

விஜய் said...

@ ஜலீலா

மிகுந்த நன்றி சகோதரி. உங்களுக்காகவே இப்பதிவு போட்டுள்ளேன்.

விஜய்

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

///ஹேர்ப்பின் வளைவுகளில்
விழுந்து நெளிந்தவன்
இன்னுமெழவில்லை///

அருமையான சிந்தனை . வாழ்த்துக்கள் !

விஜய் said...

@ பனித்துளி சங்கர்

நன்றி சங்கர், தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

விஜய்

Priya said...

//படமெடுத்த நிக்கானுக்கு தெரியும்
என் விழிகளின் காதல் தவிப்பை//...ம்ம்...சூப்பர்!

விஜய் said...

@ பிரியா

தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி

விஜய்