17.3.11

ஒருமுறை



ஒருமுறை பார்

என் கருவிழிதனில்

நட்சத்திரம் அறி


ஒரு சொல் பகர்

உன் பெயருக்கெழுதும்

என் உயிரின் உயிலை வாசி


ஒருமுறை சிரி

என் சிரசின் பின்

ஒளிவட்டம் காண்


ஒருமுறை அணை

எழும்பு மஜ்ஜையில்

புது அணுக்களின்

உற்பத்தி உணர்


ஒருமுறை முத்தமிடு 

உயிர் பூக்கும்

உன்னத ஓசை கேள்


ஒருமுறை திற 

இதயக்கதவினுள்

நுழைந்து மூடி

மறைந்தே வாழ்வேன் ...........................

24 comments:

மதுரை சரவணன் said...

அருமை.வாழ்த்துக்கள்

ஹேமா said...

ஒருமுறைதான் வாசித்தேன்.அன்பின் பலம் வார்த்தைகளில் !

Kala said...

ஒருமுறை திற

இதயக்கதவினுள்

நுழைந்து மூடி

மறைந்தே வாழ்வேன் \\\\\\\\\\\\

விஐய்,காதல் ரொம்ப ரொம்பச் சொட்டுகிறது
கிண்ணத்தைப் பிடிக்கட்டுமா?
சாவியைத் தொலைத்துவிட்டார் போலும்....
நீங்கள் எப்படி நுழையமுடியும்?
உங்கள் கவிதையைப் பார்த்தால்
காதல் வருகிறது........
எனக்கும்,,,,,,,,,

கவிநா... said...

//ஒரு சொல் பகர்

உன் பெயருக்கெழுதும்

என் உயிரின் உயிலை வாசி //

அருமை அண்ணா..... ஒரு அட்டகாசமான எளிய கவிதை உங்கள் தளத்தில்.
''ஒரு முறை வாசித்தேன்... உள்ளம் தொட்டது கவிதை"

நன்றி அண்ணா, அழகுக்கவிதை தந்ததற்கு....

விஜய் said...

@ மதுரை சரவணன்

மிகுந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ ஹேமா

நன்றி ஹேமா

விஜய்

விஜய் said...

@ கலா

ஆஹா காதல் வந்துவிட்டதா ?

பேஷா காதலிங்க ஆனா அந்த அதிர்ஷ்டசாலி யாருன்னு மட்டும் எனக்கு சொல்லிடுங்க

விஜய்

விஜய் said...

@ கவிநா

நன்றி தங்காய்

இதேமாதிரி எழுதவா? அல்லது முன்பு எழுதிய மாதிரி எழுதவா ?

ஆலோசனை கூறவும்

விஜய்

ஸ்ரீராம். said...

சமீபத்து பாணியிலிருந்து மாறுபட்ட கவிதை! நல்லாயிருக்கு விஜய். இப்படியும் எழுதலாம் அப்படியும் எழுதலாம் என்பது என் யோசனை!

கவிநா... said...

அண்ணா, இரண்டு விதங்களிலும் உங்கள் கவிதைகள் தொடரவேண்டும் என்பதே என் ஆசை.

முன்னது, உங்கள் தமிழ்ப்புலமையின் வெளிப்பாடு...

பின்னது, உங்கள் கவித்திறனின் வெளிப்பாடு....

-அன்பு தங்கை...

அன்புடன் மலிக்கா said...

’ஒருமுறை” அழுத்தமாக இருக்கிறது அன்பின் பலம்.



சகோ எப்படியிருக்கீங்க நலமா.

arasan said...

சார் மிக சிறப்பா எழுதி இருக்கீங்க ...
இப்பவாது வெளிய வரணும் அவங்க ....

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குன்னே...
ஆனா உங்க பழைய கவிதைகளோட கம்பேர் பண்ணா
இந்த தடவை கொஞ்சம் கம்மிதான்.

விஜய் said...

@ ஸ்ரீராம்

யோசனைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@கவிநா

நன்றி தங்காய்

விஜய்

விஜய் said...

@ அன்புடன் மலிக்கா

நன்றி சகோ

வேலை பளு அதிகமானதால் உங்கள் வலைப்பூவிற்கு வர இயலவில்லை

விஜய்

விஜய் said...

@ அரசன்

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ கமலேஷ்

நன்றி தம்பி வெளிப்படையான விமர்சனத்திற்கு

எளிமையாக இருக்க வேண்டுமென்று எழுதியது தம்பி

விஜய்

விஜய் said...

@ சிநேகிதி

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி சகோ

விஜய்

Suji... said...

//ஒருமுறை திற

இதயக்கதவினுள்

நுழைந்து மூடி

மறைந்தே வாழ்வேன்//

romba nalla iruku.....

alaga iruku...

விஜய் said...

@ சுகன்யா

மிகவும் நன்றி சகோ

விஜய்

Pranavam Ravikumar said...

Very nice. Captured all the thoughts into words. My wishes.

சந்தான சங்கர் said...

இனிய தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்..

சங்கர்.

போளூர் தயாநிதி said...

காதல் ரொம்ப ரொம்பச் சொட்டுகிறதுவாழ்த்துக்கள்