கவிஞனாக்கும்
கண்ணீர் வற்றும்
கருப்பு போர்வை
முகத்தை மூடும்
கிழிந்த சட்டை
அணிய பிடிக்கும்
நிலா நினைவுகளை
உடைந்த நட்சத்திரங்களாய்
எண்ணப்பிடிக்கும்
கூதிர் காலத்தில்
உடல் தீயாய் கொதிக்கும்
எவ்வொலி காதில்
கேட்பினும்
அது உன்பெயராய்
ஒலிக்கும்
எப்பெண்ணை பார்க்கினும்
உன் கழுத்து மச்சம் தேடும்
உன் தெற்றுப்பல்லில்
சிக்கிய என் இதயம்
விதியென்னும் கோரப்பற்களில்
சிதையுண்டது
தலையணை நனைய
உப்புக்கரிக்கும் கனவுகளில்
சேர்ந்தே வாழ்கிறோம்
உயிரற்ற உடலாய்
காதல் பிரசவத்தில்
மரித்து பிறந்த
நீலக்குழந்தை
நான் .............
15 comments:
கீழிருந்து மேலாக வாசிக்கப் பிடித்திருக்கிறது
கனவாகிப்போன காதலின் நீலக்கவிதை !
அருமை விஜய். குறைவில்லாத காதல் ஆக்சிஜன் இருக்கும்போது எதற்கு நீலக் குழந்தை..? ஒரு தலைக் காதலா?
@ நேசன்
அட ! இது கூட நன்றாக உள்ளதே
நன்றி நண்பா
விஜய்
@ ஹேமா
ஆமாம்
நன்றி ஹேமா
விஜய்
@ ஸ்ரீராம்
ஆக்ஸ்சிஜன் இல்லாமல் போனதால்தான் நீலக்குழந்தை நண்பா
நன்றி
விஜய்
விஐய்,இப்படி அழலாமா?
உங்க.....இதயத்தில் இவ்வளவு ஒட்டு??எவ்வளவு
வலியிருக்கும் பாவம் விஐய்!
அப்பாவிப் பிள்ளையை இப்படி நாசம் பண்ணிட்டாங்களே!
இன்னும் முதல் காதலை மறக்கமுடியவில்லை
போலும்....
எவ்வொலி காதில்
கேட்பினும்
அது உன்பெயராய்
ஒலிக்கும் \\\\\
எனக்கு மட்டும் சொல்லுகளேன்....
என்ன பெயர்?
உங்கள்”கவிதை”த் தெரிவு
திரிவு ஆகியதால் பிரிவு
பிரிவில் திரித்தது
பிரியத்தால் எரிகிறது....!!
ம்ம்மம....நல்ல கவி தை கிறது
//எப்பெண்ணை பார்க்கினும்
உன் கழுத்து மச்சம் தேடும் //
தேடும் விஜய் தேடும்...!
நேசன் சொன்னது கரெக்ட்தான்.. எப்பிடி இப்பிடி எல்லாம் விஜய் அசத்துறீங்க..:))
//எப்பெண்ணை பார்க்கினும்
உன் கழுத்து மச்சம் தேடும் //
யதார்த்த வரிகள்..
இத அவங்க படிச்சுட்டாங்களா???
சார் மிகசிறப்பா வலியை சொல்லி இருக்கின்றீர் ..
நன்றி
@ கலா
நன்றாக தைக்கிறதா ?
நன்றி நன்றி
விஜய்
@ சத்ரியன்
நலமா நண்பா ?
நீங்க தேடுறதா விடவா !!!!!!!!
நன்றி நண்பா
விஜய்
@ தேனக்கா
நன்றி அக்கா
அலுவல் அதிகம், அதனால்தான் உடனடியாக பதிலிட முடியவில்லை
விஜய்
@ இந்திரா
ரொம்ப நன்றிங்க
படிக்க வாய்ப்பில்லைங்க
விஜய்
Post a Comment