11.5.11

(ய)(ம)(த)ந்த்ரம்ஓம் சிம்மி சிம்மி ஸ்வாஹா 
சர்வஜன வசியம் 

அனிமா சித்தி தரும் 
ஏகமுகி ருத்ராக்ஷம் 

ஓஜஸ் வளர்க்கும்
வஜ்ரொலி முத்ரா

கண்ணூறு அழிக்கும் 
காக்ரிசிங்கி தாயத்து 

சிவனார் அருளிய 
யோனி தந்த்ர ரகசியம் 

குலார்ணவ அரசியல்வாதிகளின் 
வாமச தந்திரங்கள் 

பிராணப்ரதிஷ்ட யந்திரங்களும்
ஏரொளிச்சக்கரமருளிய திருமந்திரமும் 

எத்தனை இருப்பினும் 
எவ்வுயிரும் உய்ய 
தாய் எனும் 
ஈரட்சர மகா 
மந்த்ரம். 
   

16 comments:

ஹேமா said...

விஜய்...அம்மாவைப்பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்.சொல்லச் சொல்ல முடியாத வார்த்தைகளுக்குள் அம்மா !

அரசன் said...

சார் கவிதையில ஏதோ சொல்லிருக்கிங்க
ஆனா எனக்கு ஒன்றும் விளங்க வில்லை ..
கடைசியில் மட்டும் புரிகிறது ...

இராஜராஜேஸ்வரி said...

ஈரட்சர மகா மந்திரத்திற்குப் பாராட்டுக்கள்.

ஸ்ரீராம். said...

கடைசி வரிகள் மட்டும் தெளிவாய்...

Kala said...

ஐய்யா! ஜோசியக்காரரே!!
ம்ம்ம்மம்ம.... ஒன்றுமே
புரியவில்லை
இருந்தாலும் ......தாய்மையே
மந்திரம்., அதற்கும்
ஒரு மந்திரமுண்டா?

இனி உங்க தளத்துக்கும் பயந்து,பயந்துதான்
வரவேண்டும் ஏதாவது மந்திரதந்திரத்தால்
மயக்கிபுட்ட...!! அப்புறம் யார் பதில் சொல்வது..!!??

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அருமை விஜய்..:))

பலே பிரபு said...

சில வரிகள் புரிகின்றன. சில புரியவில்லை.

நடைமுறை தமிழிலும் கொஞ்சம் எழுதுங்கள் அண்ணா...

சந்தான சங்கர் said...

ஆஹா..
அன்பே மந்திரம்
தாயன்பே மஹா மந்திரம்.

அருமை நண்பா

விஜய் said...

@ ஹேமா

மிகுந்த நன்றி ஹேமா

நடுவில் அலுவல் அதிகமானதால் எந்தப்பக்கமும் வர இயலவில்லை

விஜய்

விஜய் said...

@ அரசன்

நெஞ்சார்ந்த நன்றி அரசன்

விஜய்

விஜய் said...

@ இராஜராஜேஸ்வரி

நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

நன்றி நண்பா

(கீழே விளக்கம் போடலாமா ?)

விஜய்

விஜய் said...

@ கலா

தமிழருவியை யாரவது கட்டுபடுத்த முடியுமா ?

பயப்படாம வாருங்கள்

விஜய்

விஜய் said...

@ தேனக்கா

மனதார்ந்த நன்றி அக்கா

நீங்கள் மிகவும் பிஸி ஆகிவிட்டீர்கள்

மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்

விஜய்

விஜய் said...

@ பலே பிரபு

மிகவும் நன்றி தம்பி

இதோ அடுத்த கவிதை புரியும்படி

விஜய்

விஜய் said...

@ சந்தான சங்கர்

நண்பா நலமா ?

திருமணம் எப்போது ?

தொடர்பு கொள்க

நன்றி

விஜய்