27.5.11

மறுதலி



சூரியன் தன்னிருக்கையை 
நிலவுக்கு தந்த பொழுது 

திவலைகள் தெறித்த வானில் 
விப்கியார் வண்ணம் 

நனைந்த தலையை 
துவட்டி கொண்ட மரங்கள் 

கருத்த மேகங்களின் 
கவன ஈர்ப்பு மாநாடு 

பூக்களின் இதழ்களில் 
முத்து முத்தங்கள் 

இனிமையான 

ஈரமான 

இருமுட்கள் பிரிந்த 
அந்தி நேரத்தில் தான் 

சொன்னாய் 

என்னை பிடிக்கவில்லையென


14 comments:

Chittoor Murugesan said...

நானும் ஏதோ ரொட்டீன் கவிதை போலனு நினைச்சுத்தேன் படிச்சேன்.

ஒரு குறும்படத்துக்கு தேவையான ப்ரசன்டேஷன், டேக்கிங்,க்ளைமேக்ஸ் வாவ்.

தூள்..

ஹேமா said...

விஜய்...எங்க ஆளையே காணோம்.ரொம்ப வேலையா ?

கவிதை பிரிவு சொல்கிறதே !

நிரூபன் said...

வேதனைகளின் பகிர்வாய் உங்களின் கவிதை பிறந்திருக்கிறது சகோ.

ஸ்ரீராம். said...

வர்ணனைகள் பிரமாதம். இனிமையான சூழலில் கசப்பு மருந்து...

arasan said...

சார் ...
நான் மிகவும் ரசித்தேன் நீங்கள் கூறிய உவமைகளை ...

இறுதி வரிகள் தான் மனதை என்னவோ பண்ணுகிறது ...

போளூர் தயாநிதி said...

கசப்பு மருந்து...

அன்புடன் மலிக்கா said...

எப்படியிருக்கீங்க சகோ. நலமா.
பிரிவை மிக அழகாய் சொலியிருக்கீங்க அருமை. சகோ/

விஜய் said...

@ சித்தூர்.எஸ்.முருகேசன்

வாங்க தலை

மிக மிக நன்றி தலை

இதுபோன்ற வாழ்த்துக்கள் என்னை மென்மேலும் உயரவைக்கும்.

விஜய்

விஜய் said...

@ ஹேமா

நலம்தானே ?

எம்.ஏ தேர்வு எழுத படித்துகொண்டு இருந்தேன்.

பிரிவு எப்பொழுதும் சுகம்தானே

நன்றி

விஜய்

விஜய் said...

@ நிரூபன்

தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ அரசன்

என்ன செய்வது, சில சமயம் நாம் நினைப்பது நடப்பதில்லை

நன்றி

விஜய்

விஜய் said...

@ போளூர் தயாநிதி

மிகுந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ அன்புடன் மலிக்கா

நலம்தான் சகோ

மிகுந்த நன்றி சகோ

விஜய்