17.7.11

சும்பி





இதழ்களென்பது.......


நரம்புகளை முறுக்கேற்றி 
காம சங்கீதமிசைக்கும்
அற்புத வாத்தியம்


ஒற்றி எடுக்க எடுக்க 
உலராத 
அதிசய சுரபி 


இடப்படுமிடத்தில்
தடங்கள் வேறானாலும் 
வேர்களசைக்கும்
வினோத விழுதுகள் 


சப்த மாத்திரைகளின் 
வேறுபட்ட ஒலிகளில் 
உயிர்க்கூடசையும் 
உன்மத்த வித்தை 

விழி செருகி 

தலை சாய 
பரிமாறும் முத்தங்கள்
குறிசேரா

சைவக்கலவி 


யாருக்கோ 
இடப்படாத 
முத்தமொன்று 
உறைந்தே கிடக்கிறது 
ஒவ்வொருவரின் 
உதடுகளிலும் ................

20 comments:

சத்ரியன் said...

//ஒற்றி எடுக்க எடுக்க
உலராத
அதிசய சுரபி //

ம்!

பசிக்குது ராசா. நான் வீட்டுக்கு கிளம்பறேன்.

ஸ்ரீராம். said...

முத்த ஆராய்ச்சி...?

Prabu Krishna said...

நன்றாக உள்ளது அண்ணா....

ஹேமா said...

ம்....!

நிரூபன் said...

ம்....அழகிய குறியூட்டுக் கையாளலுடன், யாருக்கோ இடப்படாத முத்தத்தினை அழாககச் சொல்லியிருக்கிறீங்க.

Kala said...

ஹேமாவின் வெட்கம் ம்....மில் தெரிகிறது
விஐய்!

Kala said...

பசிக்குது ராசா. நான் வீட்டுக்கு கிளம்பறேன்.\\\
விஐய், பாத்தீர்களா?உங்கள கவிதையைப் படித்துவிட்டு..........

இவருக்கு இங்கு "சொந்தவீடு" இருப்பதாக நான் அறியவில்லை அப்படி இருக்குபோது! எங்கே போகப்போகிறார்? பசி எவ்வளவுக்குப் பாதித்திருக்கிறது உங்கள கவிதையால் பாத்தீர்களா?

Kala said...

என்ன கவிஞரே! ரொம்பதான் நீங்கள பார்த்த இதழ் இழுக்கிறதோ?
ஏங்க வைத்துக்கொண்டிருக்கும் அந்த இதழின் சொந்தக்காரி யாரோ!..?

சத்ரியன் said...

//இவருக்கு இங்கு "சொந்தவீடு" இருப்பதாக நான் அறியவில்லை அப்படி இருக்குபோது! எங்கே போகப்போகிறார்? பசி எவ்வளவுக்குப் பாதித்திருக்கிறது ..//

சிங்கப்பூரில் ‘உணவுக்கடை’க்கா பஞ்சம்?
சகுந்தலா, கோமளா,கமலா...இதுகள்ல எதோ ஒரு விலாஸ்.

சத்ரியன் said...

//என்ன கவிஞரே! ரொம்பதான் நீங்கள பார்த்த இதழ் இழுக்கிறதோ?
ஏங்க வைத்துக்கொண்டிருக்கும் அந்த இதழின் சொந்தக்காரி யாரோ!..?//

சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் ‘தெனாலி’ நான் அல்ல. (வாய மூடிக்கிட்டு கெளம்புடா சத்ரியா...!)

விஜய் said...

@ சத்ரியன்

வாங்க ராசா

இங்க ஒரு பட்டிமன்றமே நடக்குது போல

நடத்துங்க நடத்துங்க

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

ஆராய்ச்சி பரவாயில்லையா நண்பா

நன்றி

விஜய்

விஜய் said...

@ பிரபு

மிகுந்த நன்றி தம்பி

விஜய்

விஜய் said...

@ ஹேமா

இந்த ம் க்கு இத்தனை அர்த்தமா ?!

கலா சொல்லித்தான் தெரிகிறது

விஜய்

விஜய் said...

@ நிரூபன்

மிகுந்த நன்றி நண்பா


விஜய்

விஜய் said...

@ கலா

யப்பா சாமி நல்ல வேலை கண்ணழகன் மாட்டிகொண்டார்

நான் தப்பிச்சேன்

விஜய்

விஜய் said...

@ சத்ரியன்

சிங்கப்பூர் விலாஸ்களில் இட்லி நல்லாருக்குமா நண்பா !!!!!!!

விஜய் said...

@ சத்ரியன்

நீங்க தெனாலினா எலின்னு யாரை சொல்றீங்க நண்பா !!!!!!!!

Kala said...

சிங்கப்பூரில் ‘உணவுக்கடை’க்கா பஞ்சம்?\\\\\\
யார் சொன்னார் பஞ்சமென்று!
“எல்லாவற்றுக்கும்” பஞ்சமே இல்லாத நாட்டில்
நீங்கள் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்.
அதற்காக.................
சகுந்தலா,கோமளா,கமலா....எனக் பொண்ணுங்க
“இடமாப்பார்த்து” போறீகளோ!
கடையைக் காட்டி
நடையைக் கட்டி எங்கு நழுவல்!!..??
ஏய்யா ராசா ,ஓரு ஆண் பெயர்சொல்லி
ஒரு கடையும் இல்லையோ!

Kala said...

சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் ‘தெனாலி’ நான் அல்ல. (வாய மூடிக்கிட்டு கெளம்புடா சத்ரியா\\\\

பரவாயில்லை சத்ரியா!
இதெல்லாம் சகஜம்தான் பயப்படாமல்...வாயை மூடிக்கிட்டுக் கிளம்பாமல் ,அந்த வா"யை"...? யால் எங்களுக்கும்
சொன்னால் நாங்களும் உங்க திறமையைப் பார்போமல்லவா!
மூடுமந்திரமெல்லாம் எதற்கப்பு?