25.7.11

யதார்த்த கவிதைகள்1.உறுத்தல் 
களைகட்டிய 
கல்யாணவீட்டில் 
சிரிக்க முடியாமல் 
வீடு வரும்வரை
உறுத்திக்கொண்டே 
இருந்தது 
பக்கத்து வீட்டில் 
கெஞ்சி வாங்கிய 
முறுக்கு சங்கிலி  


2.அடமானம் 
பிராவிடன்ட் பணம் 
பர்னிச்சர் சந்தா
நகை சீட்டு 
எவனிடமோ 
அடகு போக 
தயாராகிறது
பெண்ணுடன்  
பெண்ணை பெற்றவர்களின்
சேமிப்பும் 


3.மணற்குடுவை 
சமவயதுள்ள
வயோதிகர்களின் 
ஆபிச்சுவரி 
பார்க்கையில்
எங்கோ
உடலில் 
கவுன்ட் டவுன் 
கேட்கிறது 

4.ஓம் 
தெருவிழாக்களில் 
அசிலி பிசிலிகளின்
இரைச்சலில் 
மறைந்து கரைகிறது
ஓம்கார நாதம்5.உயில் 
உயிலென்பது  
கொடும் பிள்ளைகளின் 
பேராசை மையினால் 
எழுதப்படும் 
மரண முன் அறிவிப்பு 
பத்திரம்
19 comments:

ஸ்ரீராம். said...

மணற்குடுவை , ஓம், உயில்...எல்லாமே பிரமாதம் விஜய்.

Kousalya said...

வாழ்வில் சந்திக்கும் காட்சிகளை கவிதையாக்கிய விதம் மிக அருமை விஜய்.

உணர்வுகளின் அழகிய வெளிபாடு.

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் யதார்த்தம்.

ஓம்.. ஆம்.

உயில்.. உருக்கம்.

சத்ரியன் said...

யதார்த்த வரிகளில், மனத்தில் படமாகவே ஓடுகிறது...!

ஹேமா said...

எல்லாமே யதார்த்தம்தான் !

Kala said...

உறுத்தல்{1லாம் கவிதை}
அனுபவமா விஐய்! இப்படிச்
செய்யலாமா?
எல்லாமே நன்று,ஆனாலும் ஒரு குற்றம்....

இப்படிப் படம்போட்டு பெண்களை

இவ்வளவு பேராசைக்காரர்களென
காட்டலாமா?எது கொடுத்தாலும் சரிசமமாக ஆக்கமுடியாதென்றும், திருப்திப்படுத்த முடியாதவர்களெனச் சொல்கிறததே!படம் {சிலர்தான் அப்படி மகனே!}

தேனம்மை லெக்ஷ்மணன் said...

உயில்தான் ரொம்ப வலித்தது.. விஜய்..:((

விஜய் said...

@ ஸ்ரீராம்

மிகுந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ கௌசல்யா

நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ

விஜய்

விஜய் said...

@ ராமலக்ஷ்மி

வாழ்த்துக்களுக்கு மிகுந்த நன்றி அக்கா

விஜய்

விஜய் said...

@ சத்ரியன்

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ ஹேமா

நலமா ?

நன்றி ஹேமா

விஜய்

விஜய் said...

@ கலா

எப்பிடிங்க இப்பிடி எல்லாம் யோசிக்க முடிகிறது தாயே !!!!

விஜய்

விஜய் said...

@ தேனக்கா

ஆமாம் அக்கா

உயிலின் வலி கொடுமைதான்

விஜய்

கமலேஷ் said...

முதல் கவிதை மிகவும் அழகுன்னே..

விஜய் said...

@ கமலேஷ் .

ரொம்ப நன்றி தம்பி

விஜய்

அம்பாளடியாள் said...

அருமையான யெதார்த்தக் கவிதைகள் .
வாழ்வின் ஒவ்வொரு சங்கடங்களும்
நிழல்போல் கண்முன் காட்சி தந்தது
தங்கள் கவிதையினால். வாழ்த்துக்கள்
சகோ முடிந்தால் என் ஆக்கங்களையும்
கண்டு களியுங்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

விஜய் said...

@ அம்பாளடியாள்

மிகுந்த நன்றியும் அன்பும்

விஜய்

நம்பிக்கைபாண்டியன் said...

100% யதார்த்தமான வரிகள், நன்றாக எழுதி இருக்கிறீர்கள்!