15.8.11

பயணம்மிச்ச சில்லறை தேடி 
நடத்துனர் முதுகை சுற்றும் 
பார்வைகள்

சித்திரை வெயிலில் 
தோள் சாயும்
சதாபிஷேக பெரியவர் 

பெருமஞ்சள் முடிச்சுடன் 
யாருக்கும் கேட்காமல் பேசி வரும்
முன்னிருக்கை புதுமண ஜோடி

சீரியல் பார்த்து 
சிரிப்பை மறந்த 
மாமியார் மருமகள் 

ங்கோ ஒரு மூலையில் 
ஒலித்து கரையும் 
"ராமன் ஆண்டாலும்"

ரொம்ப நாளாகிவிட்டது 

ராணுவ ஒழுங்குடன்  
குளிர் காற்றோடு 
பயணிக்கும் சொகுசு கார் 
பிரயாணங்கள் இப்பொழுதெல்லாம் 
சுகிப்பதே இல்லை..................................... 

  

9 comments:

சி.பிரேம் குமார் said...

super boss super lines

ஸ்ரீராம். said...

அனுபவத்தைச் சொல்லும் கவிதை அருமை.

"சீரியல் பார்த்து சிரிப்பை மறந்த மாமியார் மருமகள்" வரிகள் அருமை!

kggouthaman said...

நன்றி. நல்ல கவிதைக்கும், எங்கள் கம்பெனி தயாரிப்பின் (பஸ்) படத்திற்கும் !

Kala said...

ராணுவ ஒழுங்குடன் \\\\\

ம்ம்ம இவ்வரி அருமை
என்ன விஜய் இதெல்லாம் பார்க்காத
ஏக்கமா?
அவ்வளவு வசதியாகிட்டீர்களா?
நான் இன்னும்.ஏழைதான்!
.இக்காட்சிகளுடன்தான்...
பயணிக்கிறேன் {எங்கு என்றெல்லாம்
கேட்கபடாது}
நல்ல பார்வை

விஜய் said...

@ பிரேம்

மிகுந்த நன்றி தம்பி

விஜய் said...

@ ஸ்ரீராம்

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ கௌதமன்

ரொம்ப நன்றி சார்

ஓ உங்க கம்பெனியா ?

விஜய்

விஜய் said...

@ கலா

வசதி எல்லாம் இல்ல, ஒரு மாறுபட்ட பார்வை

நன்றி

விஜய்

Anthony said...

தனது பள்ளிப்பையை பிறர் மீது இடிக்கா வண்ணம் இறக்கி வைக்க இடம் தேடும் சிறுவனை விட்டுவிட்டீர்களே அய்யா