18.6.13

சித்தப்பாக்கள்அப்பாக்களின் எதிர் வடிவமே 
சித்தப்பாக்கள் 

அப்பா அமைதி என்றால் 
சித்தப்பா லொட லொட 

அப்பா கோபக்காரர் என்றால் 
சித்தப்பா கருணா மூர்த்தி 

அப்பா சூரியன் என்றால் 
சித்தப்பா நிலா 

பரிந்து பேசுவதிலும் 

அன்பை வெளிக்காட்டுவதிலும் 

எதை கேட்டாலும் வாங்கித்தருவதிலும் 

உற்சாகப்படுத்துவதிலும் 

தன்  உடைமைகளைத் தருவதிலும்

சித்தப்பாக்கள் இதயத்தில் நீங்காவிடம் 
பெற்றுவிடுகிறார்கள் 

அப்பாக்களும் யாரோ ஒருவருக்கு
சித்தப்பாவாய் 
இருக்கக்கூடும் 

சித்தப்பாக்களும் யாரோ ஒருவருக்கு 
அப்பாவாய் இருக்கக்கூடும் ........

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். said...

அப்பாக்கள் ஆள்காட்டி விரல் சித்தப்பாக்கள் மோதிர விரல்! :)))

அப்பாதுரை said...

கடைவரிகளில் இருக்குது கவிதை.

அப்பாதுரை said...

ஸ்ரீராம், அப்போ யார் நடு விரல்?

ஸ்ரீராம். said...

@ அப்பாதுரை.... அத்தையாய் இருக்குமோ?!! :))))

omvijay said...

நடுவிரல் நீளமா இருக்கிறதால பெரியப்பா ?!!!!!!!!!!

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை.

பின்னூட்டங்களும் ரசிக்க வைத்தன:)!

Ranjani Narayanan said...

//சித்தப்பாகளும் அப்பாவாக இருக்கக் கூடும். அப்பாக்களும் சித்தப்பாக்களாக இருக்கக் கூடும்//

ரொம்பவும் உண்மை!

விஜய் said...

நன்றி ராமலக்ஷ்மி

நன்றி ரஞ்சனி நாராயணன் அம்மா

விஜய்