17.8.13

கேசாதிபாதம்




கூந்தல் கருமுகில் 

நெற்றி பிறைநுதல்

கண்கள் கவினுரு  சேல்

பற்கள் கோ துத்தம்

முகம் சித்திரை அம்புலி 

நகில் சந்தக்குழம்பு  பருவதம் 

கொப்பூழ் பொன்னி நீர்ச்சுழி 

மருங்குல் உடுக்கை 

நிதம்பம் நறை கமலம் 

பாதம் ஆணிப்பொன் தாள் 

உன்னைத்தான் வர்ணித்துள்ளேன் 
என்றேன் .........

ஒண்ணுமே புரியவில்லை 
என்றாய் ...........

புரியாத கவிதை
எழுதுவதை இத்துடன் 
நிறுத்திக்கொள்கிறேன்...................... 

2 comments:

Yaathoramani.blogspot.com said...

எதிரியில் இருக்கும் அழகை
அருமையாக கண்ணாடிபோல்
காட்டியிருக்கிறீர்கள்
அழகு எப்போதும் தன்னை உணராது
உணர்த்தப்படவேண்டிதானே காத்திருக்கும்
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

புரியாத கவிதை என்றாலும் அழகை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் அருமை.