10.9.13

கவிதைகளிரண்டு - 2


1) நட்புக்கும் காதலுக்கும் 

காதலுக்கும் காமத்திற்கும் 

காமத்திற்கும் கடவுளுக்கும் 

மயிரளவுதான் இடைவெளி 

என்றாலும் 

அறுபடுதல்

மிகச்சிரமமாகத்தான் 

இருக்கிறது 


2)
சிலரின் காதலிகள் 
தெய்வமாகிறார்கள்

சிலரின் காதலிகள் 
தாயாகிறார்கள் 

சிலரின் காதலிகள் 
மனைவியாகிறார்கள் 

சிலரின் காதலிகள்
மகளாகிறார்கள் 

சிலரின் காதலிகள் 
மட்டும் 
பெயரற்ற உறவாக
நெஞ்சை பிசைகிறார்கள் 
  

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் கடந்து போகும்...

Bagawanjee KA said...

#அறுபடுதல்

மிகச்சிரமமாகத்தான்

இருக்கிறது #
இதுக்குத்தான் மயிரை கட்டி மலையை இழுக்ககூடாதுன்னு சொல்றது !