11.5.14

யாய்அன்பு சமைத்து 

ஆசி பெருக்கி 

இதயம் பிழிந்து 

ஈரம் சொரிந்து 

உயிர் வருத்தி 

ஊண் அளித்து

எளிமை பழகி 

ஏசுதல் அற்று 

ஐயம் களைந்து

ஒற்றுமை விதைத்து 

ஓதுதல் உரைத்து 

ஒளடதம் தந்து 

எஃகென காப்பவளே 

அன்னை ...................................

கண்ணீரால் கால்கழுவி 
வணங்குவோம் ................ 

4 comments:

சந்தான சங்கர் said...

மெய் எழுத்து உயிர் எழுத்தை

மெய்பிக்கின்றது....நலம்தானா நண்பா..

விஜய் said...

நன்றி நண்பா, நலமா ? facebook ல் இணையவும்.

Thenammai Lakshmanan said...

அ முதல் ஃ வரை அம்மாதான். ஆதியும் அந்தமும் அருமை. :)

விஜய் said...

Nandri akkaa