19.9.09

நட்பூ

தாய் - கருவறைச் சொந்தம் 
தாரம் - இதயப் பந்தம் 
நட்பு - மூளையின் முதல் சந்தம் 

நட்பின் முதல் நகை குறுநகை 


மீசை அரும்புமுன் விதையாகி 
ஆசை நரைத்தபின் விருஷமானது 


முக்கிய துயர்களின் 
முதுகு கிழிக்கும் முள்வேலி 


எவரிடமும் பகிர்ந்திரா இதயக் கீறலை
குமுறி வடித்திட ஓர் வடிகால் 


கொப்பளித்த புண்களில் கொடுந்தீயுற்றாமல்
குளிர்சந்தனம் தடவும் நன்மருத்துவம் 


நட்பின் ஊடல்
சினேகச்செடிக்கு
இயற்கையான  இடுபொருள் 


எனது வெற்றியின் ஆதார சுருதி - ஆனால் 
தோல்வியில் அபஸ்வரக்கருவி இசைப்பதில்லை 


நித்ய சந்திப்புகள் 
நிமிட புதுப்பித்தல்கள் 


நான் உன்னிலும் 
நீ என்னிலும் 
இருப்பதால் 
பரஸ்பர விசாரிப்புகள் 
சம்பிரதாய பகிர்வுகளை
நாம் அனுமதிப்பதில்லை 


மண், வேரின் நட்பு
மரமாகியது 


இடி, மின்னலின் நட்பு
மழையாகியது 

உனது நட்பு 
எனை மனிதனாக்கியது 


ஆண்பாலாகிய நமது நட்பு 
மறு பிறப்பில் 
பெண்பாலாய் தொடரட்டும் .

8 comments:

கலகலப்ரியா said...

சூப்பருங்க.. நட்புக்கு மரியாத..

//மறு பிறப்பில்
பெண்பாலாய் தொடரட்டும்//

யேஏன் நல்லாதானே போய்க்கிட்டிருக்கு... ஆ..`?

கவிதை(கள்) said...

வாழ்த்துக்கு நன்றி. பெண்களின் நட்பு எப்படி என்று அறியத்தான் பிரியா !

ஹேமா said...

//நான் உன்னிலும்
நீ என்னிலும்
இருப்பதால்
பரஸ்பர விசாரிப்புகள்
சம்பிரதாய பகிர்வுகளை
நாம் அனுமதிப்பதில்லை//

இது நட்பின் உயர் அம்சம்.எனக்கும் பிடிக்கும் இது.

//ஆண்பாலாகிய நமது நட்பு
மறு பிறப்பில்
பெண்பாலாய் தொடரட்டும்//

ஏன் இப்பிடி விபரீத ஆசை விஜய்.

கவிதை(கள்) said...

நன்றி ஹேமா
பெண்களின் நட்பு எப்படி என்று அறியத்தான் ஹேமா !

ஹேமா said...

விஜய்,அதிசயமாயிருக்கு.இதுநாள் வரைக்கும் பெண் சிநேகிதம் இல்லையா !சரி இனி நாங்க இருக்கோம்.

கவிதை(கள்) said...

நிஜம் தான் ஹேமா. தங்கள் அன்புக்கு நன்றி.

சந்தான சங்கர் said...

//நான் உன்னிலும்
நீ என்னிலும்
இருப்பதால்
பரஸ்பர விசாரிப்புகள்
சம்பிரதாய பகிர்வுகளை
நாம் அனுமதிப்பதில்லை//

உண்மைதான்,
சம்பிரதாய பகிர்வுகளை
தாண்டிய நட்பிற்கென எந்த
சம்பிரதாயமும் இருப்பதில்லை.

வாழ்த்துக்கள் நண்பரே...

கவிதை(கள்) said...

சங்கர்,
தங்களின் தொடர் ஊக்கத்திற்கு நன்றிகள் பல.