12.11.09

வெம்புவி



வட்டப்புவியின் 
நெற்றியில் பொறி

உருகும் ஆர்க்டிக் 
நகரும் பிளேட்லெட் 


கதிர்புகா கருவனம்
நெடிய கரும்பலகையாய்


கரப்பானை ஒத்த 
கவர்ச்சி பாலிதீன் 


சதாபிஷேக மரங்கள் 
நிதம் விறகுக்கு 


குளிர்சாதன ப்ளுரோ
புவிவதனம் எரிக்கும் 


இயற்கை சிதையால் 
செயற்கை சுவாசம் 
வருமிருண்ட காலத்தில் ..............




31 comments:

இரசிகை said...

naan neenga koduththa azhaippukku pathil pottu vitten....

thaamathamaakavum paathiyaagavum...
manniyungal......!

இரசிகை said...

appuram inthak kavithai purinthathu...

nallaayirukku!

க.பாலாசி said...

நல்ல கவிதை.....வாழ்த்துக்கள்....

தமிழ் அமுதன் said...

good one..!

புலவன் புலிகேசி said...

நல்ல கவிதை விஜய்..ரசித்தேன்..

சிவாஜி சங்கர் said...

India is in dire need of good young leaders!!!
but der's no effective leader!!!
So,YOUTHS lets unite n start some small activities like keeping our India clean etc....
Its a simple idea lets do this by making effective usage of the dustbins,public toilets,planting small trees near by our houses..,..many to list out
lastly......

PLZ///
LETS MAKE INDIA A CLEAN N GREEN PLACE,
LETS MAKE INDIA LITTER FREE!!!///

சிவாஜி சங்கர் said...

:) voted

விஜய் said...

@ ரசிகை
நன்றி ரசிகை. நட்புக்குள் மன்னிப்பெதுக்கு.

வாழ்த்துக்கள்

@ க.பாலாசி
மிக்க நன்றி நண்பரே

@ ஜீவன்
நன்றி நண்பா
குழந்தைகள் நலமா?

@ புலவன் புலிகேசி
நன்றி எனது அன்பு தம்பி

@ சிவாஜி சங்கர்
தங்கள் வருகைக்கும் வோட்டுக்கும் நன்றி சங்கர்

ஸ்ரீராம். said...

விஞ்ஞான முன்னேற்றத்துக்கு நாம் கொடுக்கும் விலை. மரம் நடக் கூட வேண்டாம். வெட்டாமல் இருந்தால் சரி.

Thenammai Lakshmanan said...

//குளிர்சாதன ப்ளுரோ
புவிவதனம் எரிக்கும் //

vijay puvi vathanam endra vaarthai azagu

Thenammai Lakshmanan said...

congrats VIJAY for getting interesting blog award

romba santhoshamaga unarum ungaL sakothari

thenu

ஹேமா said...

வரும் காலத்தில் மரங்களையும் மியூசியத்தில்தான் பார்க்க வருமோ !

velji said...

அச்சமூட்டும் கவிதை.பொறுப்பையும் உணர்த்துகிறது.அருமை.

விஜய் said...

@ ஸ்ரீராம்

மிக்க நன்றி ஸ்ரீராம், தங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும்

விஜய்

விஜய் said...

@ சகோதரி தேனு

விருது நான் வாங்கினால் என்ன நீங்கள் வாங்கினால் என்ன
நமக்குள் பொது தானே சகோதரி

தங்களின் நெஞ்சார்ந்த பாராட்டுக்கு நன்றி

விஜய்

விஜய் said...

ஆமாம் ஹேமா

அத்தகைய நிலைமை வராது போக வேண்டுவோம்

நன்றி

விஜய்

விஜய் said...

நன்றி வேல்ஜி

தங்களின் வாழ்த்து என்னை மேம்பட வைக்கும்

நன்றி

விஜய்

சந்தான சங்கர் said...

சுத்தமற்ற யாக்கையானேன் என
சத்தமற்று சுழன்று அழுத
வெம்புவி....


விஜய் நிறைய வளர்ச்சி
விருது கருதி பெருமிதம் தோழரே..

விஜய் said...

நன்றி சங்கர்

விருது நமது அனைவருக்கும் பொதுவானது.

விஜய்

Anonymous said...

எதிர்காலத்தில் இயற்கையின் மாற்றத்தை அழகா சொல்லியிருக்கீங்க விஜய்..

விஜய் said...

நன்றி சகோதரி தமிழ்

அடிக்கடி வாங்க

விஜய்

சத்ரியன் said...

//சதாபிஷேக மரங்கள்
நிதம் விறகுக்கு //

விஜய்,
ஏழை வீட்டு அடுப்பெறிய என்ன செய்யலாம்?

விஜய் said...

விறகுகள் வைத்து எரிக்கும் வீடுகள் மிக குறைவு இப்போ. இலவச எரிவாயு இணைப்புதான் இந்த அரசில் அள்ளி வழங்குகிறார்களே !

நேசமித்ரன் said...

நல்ல கவிதை
புவிசார் எழுத்துக்கள் அரிதான அக்கறைக்கு நடுவே காணக் கிடைப்பது மிக்க மகிழ்ச்சி

விஜய் said...

மிக்க நன்றி நேசன்

தங்களின் கவனிப்பு என்னை சற்றேனும் மெருகுபடுத்தும்

விஜய்

பா.ராஜாராம் said...

//சதாபிஷேக மரங்கள்
நிதம் விறகுக்கு//

!!!

விஜய் said...

நன்றி பா.ரா

உங்களின் வாசிப்பு, வாழ்த்து என் கவிதைகளை மேம்படவைக்கும்.

நன்றி

விஜய்

அன்புடன் நான் said...

சமூதாய நோக்கம்... கவிதையின் தாக்கம்...நன்று.

விஜய் said...

நன்றி அரசு தங்களின் தொடர் ஊக்கத்திற்கு

விஜய்

பரிதியன்பன் said...

VEMPUVI
arumai soozhal maasu illamal puviyai kaapadhu manidhar anaivarin kadamai
nandri vijay

விஜய் said...

மூத்தகவியான தங்களது வாழ்த்து என்போன்றவர்களுக்கு மிக சிறந்த ஊக்கமருந்து

நன்றி ஐயா

விஜய்