20.11.09

மலட்டு மரபணு

மதுநுரை நனைந்த கண்டம்

நுண்திரை விழிநுகர்வு

சிறுதிரை சுழியில் சிக்கிய கொடுமூளை

மாதிரையின் முன் மண்டியிட்ட மனிதம் 


கையூட்டுக்கு காக்கி 

கற்பழிக்க காவி 

கரை சுரண்ட கறைவேட்டி

பெண்கருவழிக்க ரவிக்கையணியாளின்
மார்தரா கள்ளிப்பால் 

உயிரணுவற்றவனின் துணைக்கு 
மலடிப்பட்ட மகுடம் 

வீதியில் செவியடைத்து செத்தவனை சீந்தாது 
காதலியின் கரம்பிடித்து காமப்பயணம் 

கால் செத்தவள் நிற்க 
மனம் செத்தவன் அமர்ந்திருக்கிறான் 

கொட்டுமழையில் இனம் அழிய 
குளிர்வறையிலிருந்து குடையறிக்கை

வேசியிடம் கடன் சொல்லும் 
காமபாக்கியவான்கள் 

அனைத்தும் ஒரே குறையால் 
ஜெனிடிக் அப்செஷன் ........................

27 comments:

சந்ரு said...

மிக மிக அருமையாக எழுதியிருக்கிங்க..

கவிதை(கள்) said...

ரொம்ப ரொம்ப நன்றி சந்ரு

விஜய்

தியாவின் பேனா said...

மிகவும் ரசித்துப் படித்தேன்
நல்ல கவிதை

கவிதை(கள்) said...

@ தியாவின் பேனா

நெஞ்சார்ந்த நன்றி தங்களின் தொடர் ஊக்கத்திற்கு

விஜய்

ஹேமா said...

கொஞ்சம் விளங்கியும் விளங்காமலும் பொறுக்கியெடுத்துப் போகிறேன் கொஞ்சத்தை விளங்கிகொள்ள.

//பெண்கருவழிக்க ரவிக்கையணியாளின்
மார்தரா கள்ளிப்பால்

உயிரணுவற்றவனின் துணைக்கு
மலடிப்பட்ட மகுடம் //

விஜய் அருமை அருமை.

கவிதை(கள்) said...

ரொம்ப நன்றி ஹேமா

விஜய்

ஸ்ரீராம். said...

பிரம்...மாதம். விஜய்..கலக்கல்.

வார்த்தைகள் அருமையாகவும் கோர்வையாகவும், வீரியமாகவும் விழுந்துள்ளன.

சந்தான சங்கர் said...

//பெண்கருவழிக்க ரவிக்கையணியாளின்
மார்தரா கள்ளிப்பால் //

மலட்டு
மரபணுவின்
முரட்டு
குணங்களாய்...

அருமை விஜய்.

புலவன் புலிகேசி said...

//கொட்டுமழையில் இனம் அழிய
குளிர்வறையிலிருந்து குடையறிக்கை//

அருமை விஜய் அண்ணா...

கவிதை(கள்) said...

நன்றி ஸ்ரீராம்

இலவச அரசு என்று நான் கூறியதை வாழ்த்தியதற்கும்

மிக்க நன்றி

விஜய்

கவிதை(கள்) said...

பின்னூட்ட கவி சங்கருக்கு எப்பொழுதும் எனது நன்றிகள் கோடி

விஜய்

கவிதை(கள்) said...

நன்றி தம்பி புலிகேசி

விஜய்

Sivaji Sankar said...

கால் செத்தவள் நிற்க
மனம் செத்தவன் அமர்ந்திருக்கிறான்...
ஒரே குறையால்
ஜெனிடிக் அப்செஷன்....

இனி நான் என்ன சொல்ல..???

கவிதை(கள்) said...

நன்றி சிவாஜி சங்கர்

விரைவில் தொடர்பு கொள்கிறேன்

விஜய்

thenammailakshmanan said...

//கையூட்டுக்கு காக்கி

கற்பழிக்க காவி

கரை சுரண்ட கறைவேட்டி//

அருமை இந்த வார்த்தைகள்

நல்லா இருக்கு விஜய் மலட்டு மரபணு

thenammailakshmanan said...

விஜய் நீங்க கொடுத்த அஸைன்மெண்டை எழுதிட்டேன்

வந்து பார்த்து நிறை குறை சொல்லுங்க

கவிதை(கள்) said...

வாழ்த்துக்கு நன்றி சகோதரி

பார்த்திட்டேன்

யாரையும் புண்படுத்தாமல் மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்

விஜய்

Senthil said...

Superb! Superb! Best wishes for your future Kavithaigal! Vidya Senthil, Madurai.

கவிதை(கள்) said...

thanks very much vidyasenthil

பா.ராஜாராம் said...

!!!

கவிதை(கள்) said...

நன்றி மக்கா

விஜய்

அன்புடன் மலிக்கா said...

ரசித்தேன் வரிகளைஅருமை அருமை..

கவிதை(கள்) said...

நன்றி சகோதரி

விஜய்

balakavithaigal said...

கொட்டும் மழையில் இனமழிய
குளிரறையில் குடையறிக்கை-
இனத் துரோகிகள்
நல்ல பதிவு

கவிதை(கள்) said...

தங்களின் தொடர் வருகையால் நான் மகிழ்வடைந்தேன்

மிக மிக நன்றி

விஜய்

Anonymous said...

ரொம்ப நல்லாயிருக்கு விஜய்...இத்தனை அவ்லங்களில் ஊடே எப்படி அமைதியாய் வாழ்கிறோம் நாம்...

கவிதை(கள்) said...

நமது வாழ்க்கை முறை அப்படி ஆகிவிட்டது சகோதரி

நன்றி

விஜய்