22.11.09

மாண்புமிகு பிச்சை


இடுங்கிய கேட்ராக்ட் கண்கள்
சீப்பரியா சிக்கு மயிர் 
சிரிப்பரியா காய்ந்துதடு

நெஞ்சுக்கூடு காட்டும்
சல்லடை சட்டை

ஒட்டிய வயிறு
வெற்று வட்ட தட்டு போல 

கிழிந்த மூட்டைக்குள்
மாற்றாத சட்டையும்,
குடும்ப படமும்

யாரோ ஒருவனின் தந்தை
எவனோ ஒருவனின் சகோதரன்

அனுதினம் ஆலய வாசல்
உய்விக்க மறுத்த இறைவன் 

ஒருவேளை சோறிடு
போதுமென்று சொல்ல வை

அவன் கண்களில்
இறைவன் நீ................... 




33 comments:

அன்புடன் மலிக்கா said...

ஹைய்யா நான் நானுங்க முதல்ல இடம்பிடிச்சேன்..

கவிதை நல்லாயிருக்கு சகோதரரே..

விஜய் said...

தங்களின் முதல் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழி

நீண்ட நாட்களுக்கு பின் வருகை தந்தமைக்கும் நன்றி

விஜய்

பா.ராஜாராம் said...

//கிழிந்த மூட்டைக்குள்
மாற்றாத சட்டையும்,
குடும்ப படமும்//

கண்கள் கலங்கிய வரிகள் விஜய்..

விஜய் said...

நன்றி மக்கா

நானும் உங்களை மாதிரி எழுதணும்தான் பாக்கிறேன்

முடியலையே

விஜய்

சந்தான சங்கர் said...

யாசித்த மனிதனுக்கு
யோசித்து சட்டைப்பை தடவி
தொட்டு விழுந்த
ஒற்றை காசு
எழுப்பிய ஒலியில்
திறந்தது பசியடைத்த செவிகள்..

விஜய் said...

பின்நூட்டகவிதையே ரொம்ப சூப்பரா இருக்கு சங்கர்

நன்றி

விஜய்

ஸ்ரீராம். said...

கவிதை நன்றாக இருந்தாலும் கருத்தில் மாறுபாடு உண்டு. எல்லோரும் பாவம் இல்லை..

விஜய் said...

நானும் உடன்படுகிறேன் ஸ்ரீராம்

தங்களது தொடர் வருகைக்கும் ஊக்கத்திருக்கும் மிக்க நன்றி

விஜய்

prassanna said...

pangali kalakurada

விஜய் said...

நன்றிடா பங்காளி

ஊருக்கு போய்டீயா

விஜய்

ஹேமா said...

யாராச்சும் ஆன்மீகவாதிகள் வந்து சரியா பதில் சொல்லுங்களேன்.
ஆனால் சிலபிச்சைக்காரர்கள் சோம்பேறித்தனத்தாலேயே பிச்சை எடுக்கிறார்கள் என்பது என் கருத்து.
அவர்கள் பழகிவிட்டார்கள்.

சத்ரியன் said...

//ஒருவேளை சோறிடு
போதுமென்று சொல்ல வை

அவன் கண்களில்
இறைவன் நீ................... //

விஜய்,

சுட்டிக்காட்டும் நீயும் இறைவன் தான்.

வியந்தேன்.

ஊடகன் said...

//ஒட்டிய வயிறு
வெற்று வட்ட தட்டு போல //

அனைவரும் அறியவேண்டிய உண்மையான இடுகை..........

விஜய் said...

சோம்பேறித்தனமும் பாதிபேரிடம் உண்டு. உண்மையான் ஊனத்தால், குடும்பத்தினரால் நிராகரிக்கப்பட்டவர்களும் உண்டு ஹேமா

நன்றி

விஜய்

விஜய் said...

நன்றி சத்ரியன்

தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும்

தங்களின் கவிதை கண்டு அசந்தேன்

விஜய்

விஜய் said...

மிக்க நன்றி ஊடகன்

விஜய்

"உழவன்" "Uzhavan" said...

 
//அவன் கண்களில்
இறைவன் நீ................... //
 
நல்லாருக்கு

Unknown said...

Pichaikkarargal ungal kavithaiyai vaasithal migavum santhoshama unarvargal! Avargalukku piditha varthai "SORUIDU'. Fantastic Lyrics - Vidya Senthil, Madurai.

விஜய் said...

நன்றி உழவன்

நன்றி வித்யா செந்தில்

விஜய்

விக்னேஷ்வரி said...

மனசைக் கரைக்குது.

விஜய் said...

நன்றி விக்னேஸ்வரி

தங்களின் வருகைக்கும் உணர்வுக்கும்

விஜய்

velji said...

நல்ல கவிதை.

போதுமென்று சொல்ல வை...அருமை!

விஜய் said...

நன்றி வேல்ஜி

தங்கள் தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்கும்

விஜய்

சிவாஜி சங்கர் said...

Can India Ever Overcome Its Huge Poverty Problem? It Depends On What Plan The Country Takes. Today, India Appears To Have Many Approaches To Tackling Poverty. The First Is Essentially To Bring To An End The Poor, Rather Than Poverty.
யோசிக்க வேண்டிய விஷயம் அண்ணா....

விஜய் said...

நன்றி சிவாஜி சங்கர்

தங்கள் பகிர்விற்கு

விஜய்

அன்புடன் நான் said...

அழுத்தமான கவிதை.வாழ்த்துக்கள்... விஜய்

விஜய் said...

நன்றி நண்பர் அரசு

விஜய்

புலவன் புலிகேசி said...

உணர்வு மிக்க கவிதை..அண்ணே இவுங்களுக்காக இந்த அரசு திட்டம் போடுது ஆனா செயல்படுத்துறதில்ல....

விஜய் said...

நன்றி அன்பு தம்பி புலிகேசி

விஜய்

Anonymous said...

இதையாவும் உணராமல் இருப்பது போததென்று இல்லாததற்கு ஆசைபடுகிறேனோ எனத் தோன்றியது இதை படித்ததும்....

விஜய் said...

நன்றி சகோதரி தமிழ்

விஜய்

Thenammai Lakshmanan said...

//அனுதினம் ஆலய வாசல்
உய்விக்க மறுத்த இறைவன் //

உண்மை விஜய் நானும் இப்படி நினைத்து இருக்கிறேன்

விஜய் said...

நன்றி சகோதரி

விஜய்