3.1.10

அஃறிணை




பலகோடி நுகர் செல்லுடைய 
ஞமலியின் இருட்டில் ஒளிரும் நீலக்கண்கள்

கரு சுமக்கும்
ஆண் கடற்குதிரை

முட்டையிட்டு வெண்சாரூட்டும்
நீர்வாழ் பிளாடிபஸ்

உறவியின் சிலிகான் கோர்களுணரும்
ஐப்பசி அடர்மழை

பாம்புத்தச்சன் அமைவிடத்தில்
மிகுநீர் நிலமடியில்

செவியற்ற அரவத்தின்
அதிர் சுனாமி அறிவு

மனித புணர்ச்சியின்
ஒரே பிரதி போனோபோ

தங்க கயலின்
மூன்று நொடி சிந்தனை

எலி சோதிக்கும்
மானுட மருந்துகள்

அஃறிணைகள் அனைத்தும்
அண்டதிற்க்குதவியாய்
ஆறறிவு நாம் ??...................... 




42 comments:

Paleo God said...

செவியற்ற அரவத்தின்
அதிர் சுனாமி அறிவு
//

கலக்கறீங்க விஜய் .. :))

sarvan said...

ரசித்தேன்..

Thenammai Lakshmanan said...

//எலி சோதிக்கும்
மானுட மருந்துகள்//

ரொம்ப சோகம் இதுதான் விஜய் என்ன செய்ய மனிதனுக்காய் எத்தனை பரிசோதனை எலிகள் மிருகங்கள்

ஸ்ரீராம். said...

//"அஃறிணைகள் அனைத்தும்
அண்டதிற்க்குதவியாய்
ஆறறிவு நாம் ??..."//

தண்டத்திற்காய் என்று சொல்ல வருகிறீர்களா?

அவற்றை உணர, கவிதையில் சொல்ல முடிகிறதே...

ஞமலி?

பாலா said...

நல்லா இருக்கு அண்ணே
விசயம் சொல்றீங்க நல்லது
மொழில அழுத்தம் குடுங்க இன்னமும் நல்லா வரும்

விஜய் said...

@ பலா பட்டறை

மிகுந்த நன்றி நண்பரே

தங்களை போன்றோரின் ஊக்கம் தான் என்னை கலக்க வைக்குது

விஜய்

விஜய் said...

@ சரவணன்

தங்களின் முதல் வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி நண்பரே

விஜய்

விஜய் said...

@ தேனக்கா

நன்றி சகோதரி

விஜய் said...

@ ஸ்ரீராம்

ஆம் நண்பா,

ஞமலி என்றால் நாய் நண்பா

நன்றி

விஜய்

விஜய் said...

நன்றி தம்பி பாலா

மொழி அழுத்தம் கொடுக்க முயற்ச்சிக்கிறேன்

விஜய்

கவி அழகன் said...

வித்தியாசமான கவிதை உங்களிடம் படிக்க நிறைய உள்ளது

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு விஜயநேசபாலா!

:-)

வாழ்த்துக்கள்!

நேசமித்ரன் said...

விஜய்

சொற்களின் இறுக்கத்தில் கவித்துவம் தொலையாமல் செய்திகளை ஒரு குறைந்த பட்ச காரணியாக பயன் படுத்துவதில் உங்களின் கவிதைகளின் வெற்றி வாய்க்க கூடும்

படிமம் என்பது ஒரு காட்சியின் ஊடாக
அனுபவத்தை வாசகன் மனதில் உருவாக்குதல் என்று எளிதாக எடுத்துக் கொண்டால் என்ன விதமான அனுபவத்தை இந்த கவிதை தருகிறது என்பது கேள்வி

செய்தியை அல்லது ஒரு கருத்தை சொல்ல செய்திதாள்கள் போதும் தானே கவிதை ஒரு அனுபவத்தை தரட்டுமே

வாழ்த்துகளுடனும் தீராத அன்புடனும் சொன்ன சொற்கள் இவை என்பதை அறிவீர்கள்தானே

:)

புலவன் புலிகேசி said...

நல்ல கேள்வி அண்ணா..ஆனா பதில்?

Anonymous said...

ஆற்றிவு நாம்?

இன்னும் கேள்விக்குறியாகவே தான்....

விஜய் said...

@ கவிக்கிழவன்

மிகுந்த நன்றி நண்பரே

விஜய்

விஜய் said...

@ பா.ரா

ஹா ஹா ஹா

அண்ணே உங்களுக்கு காமெடி கூட நல்லா வருது

நன்றி

விஜய்

விஜய் said...

@ நேசன்

இதைத்தான் நேசா எதிர்பார்த்தேன்.

அனுபவம் தர முயற்ச்சிக்கிறேன்

நான்தானே அறிவுரை கேட்டேன்.

தங்கள் கருத்துக்களுடன் முற்றிலும் உடன்படுகிறேன்.

நன்றி

விஜய்

விஜய் said...

@ புலவன் புலிகேசி

நன்றி தம்பி

ஆறறிவுடைய நமது சாதனை என்ன ?
இனம் அழிப்பதும் மதம் வளர்ப்பதும் தானே ?

விஜய்

விஜய் said...

@ தமிழ்

பிரபஞ்சத்தில் பல கேள்விகளுக்கு விடை இல்லை சகோதரி

மிகுந்த நன்றி சகோதரி

விஜய்

சிவாஜி சங்கர் said...

//பலகோடி நுகர் செல்லுடைய
ஞமலியின் இருட்டில் ஒளிரும் நீலக்கண்கள் //
ஆரம்பமே அருமை
நல்லா இருக்கு அண்ணே :))

விஜய் said...

நன்றி எனதருமை தம்பி

விஜய்

கமலேஷ் said...

அருமையான கவிதை
தரமான கரு
அழகான சொல்லாடல்
வார்த்தை பிரயோகங்கள் கன கச்சிதம்..
கலக்குறீங்க அண்ணா...
வாழ்த்துக்கள்..

விஜய் said...

@ கமலேஷ்

மிகுந்த நன்றி சகோதரா

தங்கள் இலக்கணம் அளவுக்கு நம்மால் முடியாது

விஜய்

சந்தான சங்கர் said...

ஒரு பதம்
ஒரு எதிர்பதம் என
உலகில் நன்மையும்
தீமையுமாய்
ஆறாம் அறிவு..
ஆறாமலும்
தீராமலுமாய்
மனிதன்....


வாழ்த்துக்கள் விஜய்..

அன்புடன் மலிக்கா said...

சகோதரரே தாங்களின் கவிக்குள் ஏதோ இருக்கு. நல்ல அழகான வரிகள்
படிக்கும்போதே நன்றாக இருக்கிறது..

சகோதரரேநேரம்கிடைக்கும்போது இதையும் பார்க்கவும்
http://fmailkka.blogspot.com

விஜய் said...

@ ப்ரிய சங்கர்

எப்போதும் கவிதையை உணர்ந்து உணர்த்துவதற்கு

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ மலிக்கா

மிகுந்த நன்றி சகோதரி

தங்களின் புதிய வலைபதிவு மூலம் நன்கருத்துக்களை அறிவிக்க வாழ்த்துக்கள்

விஜய்

thiyaa said...

அருமை
நல்ல நடை
வாழ்த்துகள்

விஜய் said...

@ தியாவின் பேனா

தங்களின் ஊக்கமிகு வார்த்தைகளுக்கு மிகுந்த நன்றி நண்பரே

பூங்குன்றன்.வே said...

அறிவியலும்,தமிழும் சேர்ந்த கவிதை சிந்திக்க வைக்கிறது...மனதை சற்று நேரம் மவுனப்படுத்துகிறது நண்பரே.

விஜய் said...

@ பூங்குன்றன்

ரசித்ததிற்கு மிகுந்த நன்றி நண்பா

விஜய்

ஹேமா said...

வர வர இன்னும் மனித அறிவு குறைஞ்சிட்டே போகுது விஜய்.
இன்னும் கொஞ்ச நாள் போனா அது எத்தனையா மாறியிருக்குன்னும் எழுதுவீங்க.பாருங்களேன்.

நல்ல கவிதை விஜய்.

சத்ரியன் said...

//அஃறிணைகள் அனைத்தும்
அண்டதிற்க்குதவியாய்
ஆறறிவு நாம் ??...................... //

விஜய்,

சிந்தனைக்கொரு கவிதை.

விஜய் said...

@ ஹேமா

உண்மைதான் ஹேமா

மனித மனங்களின் சுருங்கல்கள் விடுபடும் நாள் எந்நாளோ ?

விஜய்

விஜய் said...

@ சத்ரியன்

வாங்க நண்பா

ரொம்ப பிசியா ?

நன்றி

விஜய்

Kala said...

விஐய்! 1—5 அறிவுக்குள்இருந்திருக்கலாம்!!
6ம் அறிவுடன் இருப்பதால் தான் நடப்பவைகளை
எல்லாம் பார்த்துக் கெண்டு இருக்க முடியவில்லை

கவிவரிகளைச்

சிந்தனை செய் மனமே! நன்றி

விஜய் said...

உண்மை தான் கலா

என்ன செய்வது ?

மிகுந்த நன்றி

விஜய்

சத்ரியன் said...

//வாங்க நண்பா

ரொம்ப பிசியா ?//

ஆமாங்க விஜய். வருஷக் கடைசி...வருஷ துவக்கம்-னு படுத்தறாங்க.

(சம்பளம் குடுக்குறாகளே. அதான் கொஞ்சம் வேலையும் செய்ய வேண்டியிருக்கு.)

விஜய் said...

ஓகே ஓகே

(வாங்குற சம்பளத்துக்கு அதிகமா உழைக்கிறீங்கலாமே ஜோதிகா மாதிரி)

விஜய்

சிங்கக்குட்டி said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு விஜய் :-)

விஜய் said...

@ சிங்கக்குட்டி

நிஜமாவா நண்பா

நன்றி

விஜய்