31.1.10

செய்தித்தாள்

அதிகாலை தினமென்
துயில் கலைக்கும்
காகித உறவு
 

பிறந்து சேதி தந்து
பின் தொடரும்
ரகசிய நண்பன்


மின்வெட்டின் போது
விசிறியாக 
என் தந்தைக்கு 

பூரி திரட்டி 
அழகாய் பரப்ப 
என் தாய்க்கு

கத்திக்கப்பலாக   
காற்றாடியாக  

என்  குழந்தைக்கு 
 

பீரோ துணிக்கடியில்
சமையலறை அலமாரியில்
 
என் மனைவிக்கு 
 

பயணத்தில் விரிப்பாக
சாப்பாட்டு பொட்டலத்தின் அணைப்பாக
கொழுப்புறிஞ்சியாக  

எனக்கு

மரணித்தும் உயிர்க்கிறாய்
பட்டாசு காகிதங்களாய் 


31 comments:

விஜய் said...

நன்றி பேராசிரியரே

விஜய்

ஹேமா said...

அஃறிணையாய் தூக்கியெறியும் பொருட்களெல்லாம் இல்லாமல்போன பிறகும் இருக்கிறதுபோல மனுசன் இல்லையே விஜய்.
சிந்தனை வடிவம் அழகு.

செந்தில் நாதன் Senthil Nathan said...

ரெம்ப நல்லா இருக்கு...

புலவன் புலிகேசி said...

மாதக்கடைசி செலவுக்கு பழைய பேப்பர் கடைக்கு...இது எப்புடி இருக்கு...

விஜய் said...

நன்றி ஹேமா

விஜய் said...

@ செந்தில் நாதன்

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி

விஜய்

விஜய் said...

@ புலவன் புலிகேசி

எழுத நினைத்து மறந்ததை நினைவூட்டிய தம்பிக்கு நன்றி


விஜய்

சிவாஜி சங்கர் said...

காகிதம் மரங்களின் உதிரம்..

என் எச்சில் பசை கொண்டு
விரல் எண்ணும் பணங்களில்
ஊனமாக்க பட்டிருக்கும் சில மரங்கள்..

சரியா அண்ணா

ஸ்ரீராம். said...

மரங்களை அழித்து கூழாக்கி பேப்பர் செய்து மரங்களை வெட்டாதீர்கள் என்று அதில் எழுதுவானாம் மனிதன்..சமீபத்தில் எனக்கு வந்து குறுஞ்செய்தி இது...` அது நினைவு வந்தது.. கடலை மடித்த பொட்டலங்களில் உள்ள செய்தி கூட படிப்போம் நாங்கள்...!
கவிதை அருமை விஜய்...

சத்ரியன் said...

//மரணித்தும் உயிர்க்கிறாய்
பட்டாசு காகிதங்களாய் ..//

விஜய்,

கடைசி பந்துல “சிக்ஸ்” அடிச்சிட்டீங்களே...! வின்!!!!

Kala said...

விஐய்..! உங்கள் குடும்பத்தாரின்..
செயல்களை {கிசு கிசுவென்று}
போடாமல்...வெளிச்சமாய்
பிரசுரித்து விட்டீர்கள் உங்கள்
செய்தித் த{தாளில்}ளத்தில்!!

ரிஷபன் said...

உயிர்க்கிறாய் பட்டாசுக் காகிதங்களாய்..

ஆஹா..

பாலா said...

nalla irukkunne

விஜய் said...

@ சிவாஜி சங்கர்

கல்வியின் தாய்ப்பால் ஆகவும் எண்ணலாம் தம்பி

அருமையான சிந்தனைக்கு நன்றி

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

நானும் அப்படித்தான் ஸ்ரீராம்

சிறு செய்தி கூட நமக்கு எப்பவாவது உதவும்

நன்றி

விஜய்

விஜய் said...

@ சத்ரியன்

அன்பு நண்பா,
கிரிக்கெட் வாழ்த்துக்கு நன்றி

விஜய்

விஜய் said...

@ கலா

வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றி

(பிறந்த நாள் வாழ்த்துக்கும்)

விஜய்

விஜய் said...

@ ரிஷபன்

வாங்க நம்ம ஊர்காரரே

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ பாலா

நன்றி தம்பி

விஜய்

Anonymous said...

காகிதத்தையும் கவிதையாய் பார்க்கும் உம் கண்ணோட்டம் கவிஞனுக்கு உரிய நேர்த்து விஜய்...

விஜய் said...

@ தமிழரசி

என்னையும் கவிஞன் என்று கூறியதற்கு ரொம்ப நன்றி சகோதரி

விஜய்

சிங்கக்குட்டி said...

ரொம்ப அருமையா இருக்கு :-)

விஜய் said...

@ சிங்கக்குட்டி

நன்றி நண்பா

விஜய்

Unknown said...

Kavidhai nachchnnu irukku. Naam andradam seiyum seyalgalai alagai Kavidhaya mattri thanthuvitteer. Superb! Thodarattum ungal kavidhai pani ------- Vidya Senthil, Madurai.

விஜய் said...

Thanks Senthil @ Family

Vijay

சந்தான சங்கர் said...

சுக துக்க செய்திகளுடன்
வாசல் வழி வந்து
வாசகம் செய்துவிட்டு
உறவுகளின் கைகளில் நிறைந்து
கிழிகின்றேன் நாளைய வரவுக்கு
வழிவிட்டு...


நண்பா வெகுநாட்கள் வர இயலவில்லை
நலமா...

வாழ்த்துக்கள்.

விஜய் said...

நன்றி நண்பா

சுகம் தானே ?

விஜய்

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை விஜய். கடைசி வரிகள் இன்னும் அருமை.

விஜய் said...

நன்றி சகோதரி

விஜய்

Anonymous said...

அதிகாலை தினமென்
துயில் கலைக்கும்
காகித உறவு //
என்னதான் சன் நியுஸ் ல எல்லா செய்தியும் படிச்சாலும் பேப்பர் படிச்சாதான் முழு திருப்தி

விஜய் said...

நன்றி நண்பா

விஜய்