23.6.10

கந்தர்வம்


ஏழாம்  வீட்டில்
குரு இருப்பதால்
திருமணமே ஆகாதென்ற
சோதிடரிடம்
எட்டாம் வீட்டு ரமேஷுடன்
ஓடிப்போகவிருப்பதை
எப்படி சொல்வேன் நான் .................


29 comments:

பனித்துளி சங்கர் said...

ha ha ha funny

கமலேஷ் said...

ஹா..ஹா..
ஒரு ரகசியத்தை இவ்வளவு பகிரங்கமாகவா சொல்வது.
ரொம்ப நல்லா இருக்குன்னே...

செந்தில்குமார் said...

எப்படி
இப்படியெல்லாம்
உக்காந்து உக்காந்து
யோசிப்பிங்களோ.....

ஹேமா said...

வியஜ்..என்ன ஆச்சு !

உங்க தாத்தா பாட்டி படங்கள் அழகு.
நான் தேடிக் களைத்துவிட்டேன்.
இடங்கள் பெயர்ந்ததால் யாரிடமும் கிடைக்கவில்லை.உங்களின் படங்கள் பார்க்கையில் ஆதங்கமாக இருக்கிறது.பெறமுடியாத பொக்கிஷங்கள்.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

ரொம்ப குசும்புங்க,...

- ஜெகதீஸ்வரன்
http://sagotharan.wordpress.com/

விஜய் said...

@ ஷங்கர்

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ கமலேஷ்

பா.ரா பாணியில் ரகசியம் உடைக்கப்பட்டது

நன்றி தம்பி

விஜய்

விஜய் said...

@ செந்தில்

ஆமாம் தம்பி உக்காந்து யோசிச்சா இப்பிடித்தான் வருது

நன்றி தம்பி வருகைக்கும் வாழ்த்துக்கும்

விஜய்

விஜய் said...

@ ஹேமா

ஆம் ஹேமா, முன்னோர்களை பார்த்தாலே நமக்கு புத்துணர்வு வாய்க்க பெரும்.

சீக்கிரம் உங்களுக்கும் கிடைத்திட வாழ்த்துகிறேன்

விஜய்

விஜய் said...

@ ஜகதீஷ்

நம்மூர்க்காரரே நலமா ?

நம்ம ஏரியாவே குசும்புபுரி தானே (முசுகுந்தபுரி)

விஜய்

Kala said...

சொல்லவேண்டாம்....
காட்டிக் கொடுக்கவும் வேண்டாம்
ஓடிப்போய் நல்லாயிருக்கட்டும்
வாழ்த்தி அனுப்புங்கோ!

ஆமா, மா.... உங்க ஆத்துக்காரிக்குத்
இது தெரியுமோ ....
தொலைச்சுப் போட்டுருவா கவனம்.

ஸ்ரீராம். said...

அப்போ குரு வில்லன்... ரமேஷ் ஹீரோ....!

Thenammai Lakshmanan said...

ஓ அவ்வளவு தூரம் ஆகிப் போச்சா..விஜய்.. விஷயம் அவங்க வீட்டுக்கு சொல்லணுமே..:))

விஜய் said...

@ கலா

உங்கள் வசவுகள் தான் எனக்கு பேரூக்கம்

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

நல்லவேளை என்னை காமெடியன் ஆக்கலை

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ தேனக்கா

அக்கா நீங்களுமா சந்தேகப்படுறீங்க ?

நன்றி அக்கா

விஜய்

க ரா said...

அட்டகாசம்.

goma said...

ஏழாம் வீட்டில்
குரு இருப்பதால்
திருமணமே ஆகாதென்ற
சோதிடரிடம்
எட்டாம் வீட்டு ரமேஷுடன்
ஓடிப்போகவிருப்பதை
எப்படி சொல்வேன் நான்

ஏழாம் வீட்டைக் கவனித்துச் சொன்னவர் ,எட்டாம் வீட்டைக் கோட்டை விட்டு விட்டாரே...என்ன ஜோஸ்யர் இவர்...

அன்புடன் நான் said...

ஏழாம் வீட்டில்
குரு இருப்பதால்
திருமணமே ஆகாதென்ற
சோதிடரிடம்
எட்டாம் வீட்டு ரமேஷுடன்
ஓடிப்போகவிருப்பதை
எப்படி சொல்வேன் நான் .................//

பத்தாம் வீட்டில் இருக்கும் பாப்பாவிடம் சொல்லிதான்.

இப்படி எனக்கும் புரிவதுபோல எழுதுங்க விஜய்.

விஜய் said...

@ இராமசாமி கண்ணண்

தங்களின் முதல் வரவு நல்வரவாகுக

வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ goma

ஆமாம் சகோதரி, ஜோதிடர் சரியில்லை.

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனதார்ந்த நன்றிகள்

விஜய்

விஜய் said...

@ அரசு

ஹா ஹா , பாப்பாவிடம் சொல்லியா ? இது கூட நல்லாஇருக்கே


நன்றி நண்பா


விஜய்

சிவாஜி சங்கர் said...

"ம்வர்தந்க" அண்ணாவிடம் இந்த மாற்றம்..????

விஜய் said...

@ சிவாஜி சங்கர்

சும்மாதான் தம்பி

விஜய்

Anonymous said...

விஜய் கலக்கல்! மனம்விட்டு சிரிச்சேன்.

விஜய் said...

@ மீனாக்ஷி

நெஞ்சார்ந்த நன்றி சகோ

விஜய்

தனி காட்டு ராஜா said...

தலைவரே .....ஏழாம் விட்டில சனி,ராகு,கேது போன்ற கிரகங்கள் இருந்தால் தான் திருமணமே ஆகாது ..அல்லது தாமதம் ஆகும்னு ஜோதிடர்கள் சொல்லுவாங்க....[ஏன்னா என் ஜாதகத்துல அப்படி ஒரு அமைப்பு]........
ஏழாம் விட்டில் குரு இருப்பது ரொம்ப நல்ல அமைப்பு .........
ஒரு விசயத்த எழுதும் போது..அதை பத்தி ஓரளவாவது அறிந்து வைத்து கொள்வது நல்ல பழக்கம்............

விஜய் said...

@ தனி காட்டு ராஜா

நன்றி நண்பா கருத்துக்கு.

நான் பதினைந்து வருடங்களாக சோதிட ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

அந்தணன் தனித்து நின்றால் நின்ற இடம் பாழ்

உதாரணம் : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா (எழில் குரு)

நான் எதைப்பற்றியும் தெரியாமல் எழுதமாட்டேன் நண்பா

விஜய்

தனி காட்டு ராஜா said...

சரிங்க...ஒத்துகறேன் .....next meet பண்றேன் .....