உச்சங்கள் குடித்த
எச்சமாய்
ஒச்ச நிலா
உயிர் உருவும்
ஊதக் காற்று
தேக சுரப்பியில்
உறைந்து போன
விரக வேர்வை
பாலைவனத்தில்
நெளியும் பாம்பாய்
கீறிய நகக்குறிகள்
தேகமே மஞ்சமாய்
துடை தலையணையாய்
மாராப்பு போர்வையாய்
உறக்கம் தொலையும் கனவு
கனவு பெருக்கும் காமம்
கைக்கிளை கைவளை
உருள்கிறது
தலைவன் தேடி ..........
18 comments:
romantic one...........so lovable too
//உறக்கம் தொலையும் கனவு
கனவு பெருக்கும் காமம் //
இங்கே தொடர்மழை ... விஜய்!
@ தமிழ்
நன்றி சகோ
விஜய்
@ சத்ரியன்
உறக்கம் தொலைகிறதோ ?
நன்றி நண்பா
விஜய்
நல்ல கவிதை அண்ணா...
கவிதை புரிஞ்சுது விஜய் !
முப்பாலில் மூன்றாம் பால்...
நன்று அண்ணா...
@ பிரபாகரன்
எனதருமை தம்பி நலமா ?
வாழ்த்துக்கு நன்றி
விஜய்
@ ஹேமா
நன்றி ஹேமா
விஜய்
@ கவிநா
நலமா சகோ
தங்கையின் தொடர்ந்த வாழ்த்துக்கு மிகுந்த நன்றி
விஜய்
காமத்துப் பால்
ரொம்ப நல்லா இருக்குன்னே..
நல்லா இருக்கு கைக்கிளை .. விஜய்.. நலமா.. ரொம்ப நாள் ஆச்சு உங்க பதிவு படிச்சு..
விஜய்! உணர்வுகள் வரிகளில் பின்னி விளையாடுகின்றன!
@ கமலேஷ்
நலமா ?
நன்றி தம்பி
விஜய்
@ தேனக்கா
கை எப்படி உள்ளது ?
நன்றி அக்கா
விஜய்
@ தேவன் மாயம்
நண்பரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
விஜய்
கிறக்கங்களில் உறக்கத்தைத் தொலைக்கும் உறவுச் சோர்வு...
@ ஸ்ரீராம்
உண்மைதான் நண்பா
நன்றி
விஜய்
Post a Comment