பிரிவு நிசப்தத்தில்
நினைவுகளின் உரப்பொலி
கொய்சக இடுக்குகளில்
விரல்களின் தடங்கள்
இதழிட்ட
முத்தத்தின்
நளபாகத்தில்
நடுங்கும்
பாலிகை ரேகைகள்
பத்தும் பற்றிய
பிடரி மயிற்றின்
வேர் நுனிகளில்
டோபமைன் சுரப்பு
அக்குள் வியர்வையில்
ரவிக்கை நனைய
அணையா அணங்கு
கடிகார கடிகையின்
கைக்கிளை கழல்
விரக வெந்நீரின்
குழல்வழி பயணம்
குரல்வலியினூடே
வகிட்டின் வெண்மையில்
சிவப்பாய் எனதுயிர் .........
26 comments:
நல்லாருக்கு நண்பா :)
நல்ல கவிதை விஜய்..
@ நேசன்
முதல் வாழ்த்தே வசிஷ்டரிடமா ?
நெஞ்சார்ந்த நன்றி நண்பா
விஜய்
@ ஸ்ரீராம்
நெஞ்சார்ந்த நன்றி நண்பா
விஜய்
இரண்டு பேரும் சேர்ந்துக்கிட்டீங்களா!
சரி...கவிதை நல்லாயிருக்கு விஜய் !
கவிதை நன்று...
அன்புடைய பதிவருக்கு வணக்கம்,
தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...
அன்புடன்,
வலைச்சரம் நிர்வாகம்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
என்றும் அன்புடன்
கா.வீரா
www.kavithaipoonka.blogspot.com
வரிக்கு வரி ... அருமை விஜய்.
புத்தாண்டு வாழ்த்துகள்.
@ ஹேமா
நன்றி ஹேமா
புத்தாண்டு வாழ்த்துக்கள்
@ பிரபா
நன்றி தம்பி
புத்தாண்டு வாழ்த்துக்கள்
விஜய்
@ கா.வீரா
மிகுந்த நன்றி தம்பி
புத்தாண்டு வாழ்த்துக்கள்
விஜய்
@ சத்ரியன்
நன்றி நண்பா
புத்தாண்டு கொண்டாட்டங்கள் எப்படி ?
விஜய்
வாவ்..!
முதல் வரியின் பிரிவிலிருந்து கடைசிவரி உயிர் வரை ஒற்றையடிப் பாதை விலகாத கவிதை!
--
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா!!
கவிதை அருமை நண்பா..
புத்தாண்டு வாழ்த்துக்கள்..
வரிகள் அனைத்தும் அருமையா இருக்கு
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
ஒரு புது தடமும் உருவாக்கி வருகிறீர்கள் விஜய்.. அருமை.. தொடரட்டும்..
@ ஜெகநாதன்
மிகுந்த நன்றி நண்பா
என்னுடைய வளர்ச்சிக்கு தங்களது பாராட்டுகளே படிகற்கள்
விஜய்
@ சந்தான சங்கர்
நலமா நண்பா ?
மிகுந்த நன்றி
தங்களது கவிதைகளை மிகவும் இழக்கின்றோம்
மீண்டும் வருக
விஜய்
@ தமிழ் தோட்டம்
நன்றி நண்பா
முதல் வருகைக்கும்
முதல் ஊக்கத்திற்கும்
விஜய்
@ தேனக்கா
பிசியான நேரத்திலும் வாழ்த்துகளை பகிர்ந்ததற்கு நன்றி அக்கா
விஜய்
அண்ணா... என் வருகையைப் பதிவு செஞ்சுக்கறேன்... :)
@ கவிநா
நன்றி தங்காய்
விஜய்
ரொம்ப நல்லா இருக்குன்னே..நீங்க இப்படி எழுதுறதை படிச்சி படிச்சி எனக்கு இதை மாதிரி ஒன்னு எழுதி பார்த்தா என்னன்னு சில நேரம் தோன ஆரம்பிக்குது..
- கழல் -
அப்படின்னா என்னன்னே..
@ கமலேஷ்
நன்றி தம்பி
அவசியம் எழுதவும். உங்கள் மொழியில் படிக்க விரும்புகிறேன்.
(கழல் - கழன்று விழுதல்)
விஜய்
Post a Comment