16.6.13

முதற்காதல்



உன் பெயர் சுமந்த
வாகனம் செல்லும்போது 

உன் பெயருடைய குழந்தையை
யாரோ அழைக்கும் பொழுது 

உனக்கு பிடித்த பாடல்
ஒலிக்கும்போது 

ஆகாய நிறத்தில் அபூர்வமாக 
யாரவது தாவணி உடுத்தி செல்லும்போது 

ஆண்ட்ரியாவை திரையில்
பார்க்கும்பொழுது 

பேர் அண்ட் லவ்லியும் பாண்ட்ஸ் பவுடரும் 
சேர்ந்த வாசம் நுகரும்பொழுது 

தெற்றுப்பல் பெண்களை 
காணும் பொழுது 

டிஸ்கோ செயினில் மீன் டாலர் 
அணிந்த பெண்ணை 
கடக்கும் பொழுது 

சிவப்பு நிற பிஎஸ்ஏ சைக்கிள் 
செல்லும் பொழுது  

இதயத்தில் ஆசனமிட்டு 
அமர்ந்து நகர மறுக்கிறது 
மறக்கவியலா நினைவுகள் 

முதற்காதலின்  தோல்விதான் 
சுகமான சுமையாக 
இருக்கிறதெனக்கு ...........



8 comments:

Yaathoramani.blogspot.com said...

இதயத்தில் ஆசனமிட்டு
அமர்ந்து நகர மறுக்கிறது
மறக்கவியலா நினைவுகள்

முதற்காதலின் தோல்விதான்
சுகமான சுமையாக
இருக்கிறதெனக்கு ........

.அருமை அருமை
எல்லோரும் அனுபவிப்பதுதான் ஆயினும்
எத்தனைபேரால் இத்தனை அழகாய்
உணரும்படிச் சொல்ல இயலும் ?
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
//


ஸ்ரீராம். said...

இத்தனை விவரங்கள் இவ்வளவு துல்லியமாக நினைவில் இருக்கும்போது எப்படி அது ஆகும் விஜய்?

ஸ்ரீராம். said...

இத்தனை விவரங்கள் இவ்வளவு துல்லியமாக நினைவில் இருக்கும்போது எப்படி அது தோல்வி ஆகும் விஜய்?! [கூகிளுக்குக் கூட தோல்வி என்ற வார்த்தை பிடிக்கவில்லை போல!]

Prem S said...

//உன் பெயர் சுமந்த
வாகனம் செல்லும்போது
//

அது ஓர் தனி சுகம் அன்பரே அலாதியானது

திண்டுக்கல் தனபாலன் said...

மறக்கவே முடியாது...

அப்பாதுரை said...

காதல் தோல்வி என்றால் என்ன?

கவிதைக்கு வெற்றி.

விஜய் said...

நன்றி ரமணி சார் தங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கு

நன்றி ஸ்ரீராம் கூகுளே ஹா ஹா

ஆமாம் பிரேம்

நன்றி தனபாலன் சார்

நன்றி அப்பாதுரை சார்

'பரிவை' சே.குமார் said...

அழகான.... அருமையான கவிதை.