18.1.14

ரோஜா மலர்


நீயும் ரோஜாவும் 
இரட்டைக்குழந்தைகள் 

காதலை சொன்னபோது 
அவளைப்போலவே சிவந்தாய் 

வியர்த்தபொழுது 
அவளின் சுகந்தம் 

அணைத்தபோது முட்களாய் 
குத்தியது பூனைமுடிகள்

முத்தமிட்டபோது 
மார்கழி காலையில் 
பறித்தது போல் 
முத்து முத்தாய் 
முகத்தில் பனித்துளிகள் 

உன்னுள் புதைகிறேன் 
என்னையும் சிவக்க வை..........  

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு... அருமை வரிகள்...

வாழ்த்துக்கள்...

Anonymous said...

வணக்கம்

கவிதையின் வரிகள் அற்புதமானது வாழ்த்துக்கள்

கவிதையாக என்பக்கம் வாருங்கள்(நெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்)வாருங்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

உவமையும் பொருளும் சிறப்பாக பொருந்துகிறது! அருமை! வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...
வாழ்த்துக்கள்.

Anonymous said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-4.html?showComment=1391682719302#c5863664444865775074

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

விஜய் said...

நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே

ஜெயசரஸ்வதி.தி said...

வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ..!!!

அருமை ...!!!

தங்கள் தளத்தை தொடர்ந்து விட்டேன் ...!!!(Follower)
தொடர வாழ்த்துக்கள் ...!!!

விஜய் said...

நன்றி சகோதரி