11.9.09

ஈழம்

கொடுங்கோல் குடிதாங்கிகளின்
கொக்கரிப்பால்
இடிதாங்கிகளாய்   எம்மக்கள்

என் சகரத்த சகோதரர்கள்
குருதி சகதியில் குளித்திருக்க
மானாட மயிலாட பார்ப்பது
மானங்கெட்ட  மனசியலோ

ஈசல் கூட ஈசனை அடைய சில மணித்துளிகள்
மகப்பேறு மாதர்க்கு மகேசனடி சில நொடிகளில்

டாஸ்மார்க்கிற்கு பாஸ்மார்க் போடும் தமிழர்க்கு
ஈழத்தின் மீது மயிரளவும் ஈவு இல்லையே ?

எண்ணற்ற இயற்கை வளம் ஈழத்தில்
மனித எருக்களும் சேர்த்து

புத்தரின் போதனைகள்  ஈரம்
செத்தவனுக்கு புரியுமா ?

இனமே அழிய தமிழகமே
சத்குருவாய் மாறியது எப்போது ?

ஈழ ஓலம் கேட்க மறுத்த காதுகளில்
ஈயத்தை ஊற்றுங்கள்

எம்மவர்களின் சடலங்கள்
உரமாகி ரத்த பூவல்லவா பூக்கும்

பிஞ்சுகளை கூட வேரறுத்த  மா ஈனர்களின்
நெஞ்சறுக்க வழியில்லையே ?

என்றாவது ஒருநாள் தனி ஈழம் அமைத்து சமைத்த செய்தி கேட்கும்
என் நெஞ்சில் தைத்திருக்கும் முள் சற்று கரையும்

வேறு என் செய்வேன் யான் - கையாலாகாத கவி
புனைவதை தவிர ........................................

5 comments:

ஹேமா said...

//எண்ணற்ற இயற்கை வளம் ஈழத்தில்
மனித எருக்களும் சேர்த்து

புத்தரின் போதனைகள் ஈரம்
செத்தவனுக்கு புரியுமா ?//

ஒவ்வொரு வரிகளுமே வலிந்தெடுத்து வலி கிளறும் வரிகள்.நான் வலி மறக்க என்றே மாற்றுக் கவிதைகள் எழுதுகிறேன் சிலசமயங்கள்.என்றாலும் என் வீட்டு வளையில் தடுக்கி விழுந்து எழும்பியபடிதான்.

ஏன் உங்கள் பெயரோடு கவிதைகளைத் தரக்கூடாதா ?

விஜய் said...

நன்றி ஹேமா, எனது பெயர் விஜய். தமிழ்நாட்டில் இருக்கும் எனக்கே இவ்வளவு வலி என்றால் உங்களது வலிக்கு அளவுகோல் கிடையாது. ஏதோ புதிய கவிஞன் நான். தவறு இருந்தால் பொறுத்துகொள்ளவும் .

ஹேமா said...

வணக்கம் விஜய்.குறை என்று ஒன்றுமே இல்லை.அருமை.உங்கள் உணர்வுகளை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறீர்கள்.இன்னும் எழுத எழுத இன்னும் அழகாய் ஒளிரும் உங்கள் எழுத்துக்கள்.நிறையவே எல்லா உணர்வுகளையும் கலந்தே எழுதப் பாருங்கள்.என் தேசக் கவிதைகள்-வலிகள் என் கவிதைகளுக்குள் நிறையவே இருக்கின்றன.
பார்த்தீர்களா?நன்றி விஜய்.தொடர்ந்தும் எழுதுங்கள்.குழந்தைநிலாவுக்கும் அடிக்கடி வரவேணும்.

Ashok D said...

நல்லாயிருக்குங்க வெற்றி பெற வாழ்த்துகள்

விஜய் said...

நன்றி அஷோக்