13.9.09

வென்றெழு

வெந்ததை தின்று விதி வந்ததும் சாகாதே 
சந்ததிக்கு சமைத்து வை 

சிதைந்த சிந்தனைகளை புதை 

நொடிமுள்ளாய் உழைத்து 
இருமுள் போல் வாழ்வை மணியாக்கு

பீனிக்ஸ் போல் இறந்து பிறக்காதே 
மண்புழுவாய் மரித்து உரமாகு

வெற்றி - கனி 
தோல்வி - காய்
காயே  பின் கனியும் 

பெற்றோரை துதி 
கற்றோரை மதி 

காதலி அல்லது 
காதலிக்கபடு 
காதல் தாழ்வு பிறழ்வுகளை 
தகர்த்திடும் அகமருந்து 

அன்பு வளர்த்து 
பகைமை தேய் 

புத்தி செதுக்கி 
வித்தை பெருக்கு

சிறகுகளை மாற்றி போட்டால் 
சிறு குருவிகூட பறக்காது 

மாற்றி யோசிக்காதே 
யோசித்து மாறு 

விழுந்தாலும் வென்றெழு

6 comments:

ஹேமா said...

விஜய்,உண்மையில் உணர்வைத் தூண்டும் வரிகள் அத்தனையும்.சோர்வை நீக்கி உற்சாகம் தரும் ஊக்கச்சத்து உங்கள் சிந்தனைக் கவிதை.வாழ்த்துக்கள்.

விஜய் said...

நன்றி ஹேமா, வரங்களுக்கு அப்புறம் தவமா, கலக்குங்கள்.

சந்தான சங்கர் said...

மாற்றி யோசிக்காதே
யோசித்து மாறு

யோசிக்க வைத்த வரிகள்,

யாசிக்கின்றேன்...
வாழ்த்துக்கள்.

விஜய் said...

நன்றி நண்பரே, தொடர்ந்து வாசியுங்கள். தங்களின் கவிதைகளும் அருமை.

பா.ராஜாராம் said...

அடேங்கப்பா,ரொம்ப நல்லா இருக்கு இதுவும் உங்கள் கையில் இருக்கிற குட்டிக்கவிதையும்!குட்டீஸ்க்கு அன்பு!

விஜய் said...

மிகவும் நன்றி நண்பரே.