15.11.09

ரேடிகல் உலகு




வைரல் உறவுகள் 
பாக்டீரிய பாசங்கள்  

அம்மிக்கிடையில் அகப்பட்ட 
பூண்டு பற்களாய்
இனத்தின் முகம் நசுக்கி 
பூஜை - புத்தனின் பல்லுக்கு 

அண்டத்திலுள்ள நைட்ரஜன் 
மூட்டைகளில் யூரியாவாய் 

786 திருப்பி சம்ஸ்க்ருதத்தில் 
எழுதினால் ஓம் 
புரியாமல் மோதும் 
போரிச கொள்கை புழுக்கள் 

ஸ்டெம்செல் காலத்தில் 
சாதீய வோல்கோனாக்கள் 

பணம் கொடுத்து ஓட்டு
பங்கு சந்தையை சுரண்ட 

அலைபேசி கோபுரத்தால் 
அழிந்து போன சிட்டு குருவிகள் 

தூர் வாரப்படாத ஏரியில் நின்று 
நதிநீர் இணைப்பு நரித்தனங்கள் 

அழுகிய மூளை சிந்தனைகள் 
பழகிப் போன பாசுரங்களாய் ............



30 comments:

ஸ்ரீராம். said...

அழுகிய மூளை சிந்தனைகள்
பழகிப் போன பாசுரங்களாய்.....//

புரியவில்லை.

விஜய் said...

அரசியல்வாதிகள் வாக்குறுதிகள் பேச்சுகள் எல்லாம் கேட்டு கேட்டு புளித்து போனதைத்தான் சொல்லியுள்ளேன்.

நன்றி ஸ்ரீராம்

Thenammai Lakshmanan said...

//அண்டத்திலுள்ள நைட்ரஜன்
மூட்டைகளில் யூரியாவாய் //



அற்புதம் விஜய்

Thenammai Lakshmanan said...

//அலைபேசி கோபுரத்தால்
அழிந்து போன சிட்டு குருவிகள் //


உங்களின் இயற்கை பற்றிய நேசம் மற்றும் கவலை அர்த்தமுள்ளதுவிஜய்

விஜய் said...

மிக்க நன்றி சகோதரி

விஜய்

பா.ராஜாராம் said...

கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு விஜய்.

ஹேமா said...

//அம்மிக்கிடையில் அகப்பட்ட
பூண்டு பற்களாய்
இனத்தின் முகம் நசுக்கி
பூஜை - புத்தனின் பல்லுக்கு //

புத்தனின் போதனைகள் புனிதமானவைதான்.அவரின் பல்லை வைத்துப் பூஜை செய்யும் சிங்களவனுக்கு இதைவிட எப்படி அடிக்க முடியும் !

சமூகச் சிந்தனையோடு நல்லதொரு கவிதை விஜய்.

velji said...

கவிதை அருமை.

'ரேடிகள்' என்ற வார்த்தையை உபயோகித்த விதமும்.

சந்தான சங்கர் said...
This comment has been removed by the author.
சந்தான சங்கர் said...

மரித்துவிட்ட சிட்டுக்களின்
மெட்டுக்கள்,
ஊரணியில் ஓரணியாய்
முளைத்துவிட்ட வீடுகள்
என என் வரிகளை
நினைவுபடுத்துகிறது விஜய்.



சமுதாய சிந்தனை
வாழ்த்துக்கள்..

விஜய் said...

நன்றி பா.ரா

என் கவிதைகள் உங்களுக்கு பிடித்தது நான் செய்த பாக்கியம்

மிக்க நன்றி மக்கா

விஜய்

விஜய் said...

@ ஹேமா

எனது முதல் ஊக்கமே, தங்கள் வாழ்த்துக்கு நன்றி

விஜய்

விஜய் said...

நன்றி வேல்ஜி

தங்கள் தொடர் ஊக்கத்திருக்கும் வாழ்த்திற்கும் நான் என்ன கைம்மாறு செய்ய போகிறேன் தெரியவில்லை.

நன்றி

விஜய்

விஜய் said...

சங்கர் தங்களின் கவிதை பின்னோட்டத்திற்கு என்றும் ரசிகன் நான்.

வாழ்த்திற்கு மிக்க நன்றி.

விஜய்

சிவாஜி சங்கர் said...

‘கொலை வாளினை எடடா
மிகும் கொடியோர் செயல் அறவே’ -புரட்சிக்கவி.பாரதிதாசன்.

உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் நண்பர்களே - சேகுவேரா

கடவுளை மற மனிதனை நினை!!!- பெரியார்

"மனித குலத்தின் நன்மைக்காக சிறப்பாக
செயல்படுவதற்குரிய வேலையை நாம் தேர்ந்தெடுத்து விட்டால், அதன் சுமை நம்மை அழுத்த முடியாது. ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காக செய்யப்படுகின்ற தியாகம்."- மார்க்ஸ்

"பாதையை தேடாதே.. உருவாக்கு" - லெனின்

"வறுமை தானாகவே மாறும் என்பது
பழைய பொய்.
ஒரு சமூக மாற்றத்தின் மூலமே நிகழும்
என்பதே மெய்." - மாவீரன் பகத்சிங்

""அழுகிய மூளை சிந்தனைகள்
பழகிப் போன பாசுரங்களாய்"" - Vijay

ஓகேவா....

விஜய் said...

அய்யோ என்னங்க பெரிய பெரிய ஆள்களோட என்வரியையும்.
உங்களோட அன்பின் உச்சமாக அதை நான் நினைத்து மகிழ்கிறேன்.

மிக மிக நன்றி சிவாஜி சங்கர்

விஜய்

பாலா said...

பிரமாதம் அண்ணா ரொம்ப நல்லா இருக்கு மொத்தமும் ரசித்தேன்

புலவன் புலிகேசி said...

//ஸ்டெம்செல் காலத்தில்
சாதீய வோல்கோனாக்கள் //

//தூர் வாரப்படாத ஏரியில் நின்று
நதிநீர் இணைப்பு நரித்தனங்கள் //

உண்மை விஜய்...

விஜய் said...

நன்றி தம்பி பாலா

ஊர்ல தான் இருக்கீங்களா ?

விஜய்

விஜய் said...

நன்றி புலவன் புலிகேசி

விஜய்

அன்புடன் நான் said...

உங்களின் கோப பட்டியல் கவிதை மிக அருமைங்க.
அதிலும் அந்த சிட்டு குருவி எனக்கு மிக பிடிக்கும். ஒட்டு மொத்த குருவிகளின் சத்தம்... அதன் கூடு...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வாழ்த்துக்கள்...விஜய்.

விஜய் said...

நன்றி அரசு

விஜய்

Anonymous said...

(வந்தேன் விஜய் )

ஆங்கில கலவையில் அர்த்தமாய் ஜொலிக்கிறது இந்த அற்புத கவிதை

இன்றைய செய்கை உலகுயம் அதன் செயலாக்கங்களும் பரிமாறப்பட்டுள்ளது இதில்..

விஜய் said...

நன்றி சகோதரி

அடிக்கடி வாங்க

விஜய்

நேசமித்ரன் said...

ரொம்ப நல்லா இருக்கு

விஜய் said...

நன்றி நேசன் நேய வாழ்த்துக்கு

விஜய்

விக்னேஷ்வரி said...

உண்மைகளை அழகான கவிதை வரிகளில் பதிவு செய்திருக்கிறீர்கள். அருமை நண்பரே.

விஜய் said...

@ விக்னேஷ்வரி

மிக்க நன்றி சகோதரி

விஜய்

பரிதியன்பன் said...

கட்டுப் பாடற்ற சிட்டுக் குருவிகளைக்
காக்க இன்று யார் நினைக்கிறார்கள்
சிட்டுக் குருவியைப் பாடாதவர் கவிஞரில்லை
வாழ்த்துகள் விஜய்

விஜய் said...

மிக்க நன்றி ஐயா

விஜய்