9.10.10

கருட நிழல்


அதிமதுர இதழ்களின்
முத்தம் குடித்த உடல்


ஏறு அழிஞ்சில்
விதைகளாய்
ஒட்டிக்கொண்ட
நினைவுகள்


செல்லரித்த
நிழற்படம் கண்டு,
கருட நிழல்
கண்ட சர்ப்பமாய்
சிலிர்க்கும் மயிர்க்கால்கள்


சுணங்கி மார்பு
புதைத்த 
கேச சுகந்தம்


விரல்களால் 
இதயத்தில் 
வரைந்த 
உன் பெயர்  


கண்கள் குளமாகி 
கன்னத்தின் வீதியில்  
மழை வெள்ளம் 


தோற்ற காதல்
மரிக்காது
மரித்தாலும் நம் காதல்
தோற்காது..............

26 comments:

Anonymous said...

தோற்ற காதல்
மரிக்காது
மரித்தாலும் நம் காதல்
தோற்காது..............

உண்மைக்காதலுக்கு மரணமில்லை தானே..

ஹேமா said...

விஜய்...காதல் என்கிற வார்த்தைதான் வாழ்வின் பிடிப்பே !

ஏனோ எனக்கு உங்கள் பதிவு ஒரு பக்கத்தில் ஒற்றைவரியில் வருகிறது !

பத்மா said...

வாரே வாஹ் ...
அருமை விஜய்..
காதலால் எப்படி தோற்றுபோக முடியும்?

சத்ரியன் said...

//செல்லரித்த
நிழற்படம் கண்டு,
கருட நிழல்
கண்ட சர்ப்பமாய்
சிலிர்க்கும் மயிர்க்கால்கள்...//

அழகான ஒப்பீடு விஜய்...!

ஸ்ரீராம். said...

விரல்களால்
இதயத்தில்
வரைந்த
உன் பெயர்//


நினைவுகளால்...?

தோற்ற காதலுக்கு இருக்கும் மதிப்பு ஜெயித்த காதலுக்கு இருப்பதில்லையோ? கிடைக்காத ஒன்றின் மேல்தான் பிடிப்பு அதிகம். கிடைத்து விட்டால் அதன் சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது...இல்லை?

அன்புடன் மலிக்கா said...

உண்மைக் காதல் வரிகளால் வருடுகிறது காதல் காதல்..

விஜய் said...

@ தமிழ்

ஆம் சகோ

நன்றி

விஜய்

விஜய் said...

@ ஹேமா

நன்றி ஹேமா

என்ன ப்ரௌசெர் உபயோகிக்கிறீர்கள் ?

விஜய்

விஜய் said...

@ பத்மா

ஆம் சகோ

காதலர்தான் தோற்கிறார்கள்

காதல் அல்ல

நன்றி

விஜய்

விஜய் said...

@ சத்ரியன்

வாங்க நலமா நண்பா ?

என்ன பேர் வைத்தீர்கள் ?

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

காதலியின் விரல்களால் காதலனின் இதயத்தில் வரைந்தது

ஆம் நண்பா தோற்றால் சுகமே

விஜய்

விஜய் said...

@ மலிக்கா

வாங்க சகோ, நலமா ?

நன்றி சகோ

விஜய்

சிவாஜி சங்கர் said...

//அதிமதுர இதழ்களின்
முத்தம் குடித்த உடல்//

இநத வரிகள் நல்லாஇருக்குண்ணே.. ..

விஜய் said...

@ சிவாஜி சங்கர்

தம்பி நலமா ?

நன்றி தம்பி

விஜய்

Thenammai Lakshmanan said...

கண்கள் குளமாகி
கன்னத்தின் வீதியில்
மழை வெள்ளம் //

அருமை விஜய்..

என்னோட பதிவை பாருங்க..தீபாவளி மலருக்கு உங்க படைப்பை இன்று அல்லது நாளை அனுப்புங்க..

Kala said...

அதிமதுர இதழ்களின்
முத்தம் குடித்த உடல்\\\\\\

என்ன பிரிவு தந்த ஏக்கம்
வருடங்கள் பல கடந்தும்
இனிக்கின்றதோ?

மறக்கவா! முடியும் என்ன விஐய்!!

விஜய் said...

@ தேனக்கா

நன்றி அக்கா

இன்றே அனுப்புகிறேன்

விஜய்

விஜய் said...

@ கலா

குடும்பத்துல குழப்பம் ஏற்படுத்த நீங்க ஒருத்தர் போதும்

நன்றி நன்றி நன்றி

விஜய்

thiyaa said...

தோற்ற காதல்
மரிக்காது
மரித்தாலும் நம் காதல்
தோற்காது..............

//

அருமையான வார்த்தை
நூற்றில் ஒன்று

விஜய் said...

@ தியா

நெஞ்சார்ந்த நன்றி நண்பா


விஜய்

Anonymous said...

அருமையான கவிதை. ஹேமா சொல்வது போல் காதல்தான் வாழ்வின் பிடிப்பே. இனிமையின் உச்சமும் அதுதான். துயரத்தின் உச்சமும் அதுவேதான்.

விஜய் said...

@ SPS

மிகுந்த நன்றி SPS

விஜய்

Anonymous said...

பொருத்தமான புகைப்படம்..

காதல் தோற்பதில்லை.. அவ்வாறானால் அதற்கு காதலர்களைத் தவிர வேறேதும் காரணமிருப்பதில்லை.

விஜய் said...

@ இந்திரா

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி சகோ

விஜய்

hemikrish said...

அழகு நடை ..விவரிப்பு அருமை..வாழ்த்துக்கள்

விஜய் said...

@ ஹேம்ஸ்

மனம்திறந்த பாராட்டுக்கு நன்றி சகோ

விஜய்