14.7.11

சாயும் நாற்காலி



98ல் வாங்கிய கணிணி
பரணில் தூங்க 
மடிக்கணினி 
அலங்கார மேசையில் 


நேஷனல் டேப் ரெகார்டர் 
ஒட்டடை படிய 
ஐ பாட் அலறுகிறது 


லேண்ட்லைன் ஒலித்து
பல நாளான பொழுதும் 
பிளாக்பெர்ரி அழைக்கிறது 


பழையதுகளை ஒதுக்கியே 
வாழ்கிறது இளையதுகள் 


ஈசி சேரில் அறையின் 
மூலையில் நான்
என்னை நிரப்புபவன் 
யாரோ ? 
   

19 comments:

ஹேமா said...

இதுதான் வாழ்வியல் வியஜ்.பழையதைக் கொஞ்சம் தள்ளி வைத்தாலும் அதன் திறமையை எப்போதும் மறப்பதில்லைத்தானே !

ராமலக்ஷ்மி said...

பழையன கழிதல் மனிதருக்கும் வந்து விடக் கூடாதெனும் ஆதங்கம் தெரிகிறது வரிகளில்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அடுத்த தலைமுறை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஓடும் வேகத்தில் பின்னோக்கி பார்க்கக்கூடிய பக்குவத்தில் இன்று யாரும் இல்லை...

அற்புதமான கவிதை

Yaathoramani.blogspot.com said...

அருமையான கவிதை
பொருட்களாக சொல்லிக் கொண்டு வந்து
கடைசியில்" மூலையில் நான் "எனச் சொல்வது கூட
மனிதன் கூட உபயோகப் படுகிற வரையில்மனிதனாகவும்
அதன் பின்ஒரு பயனற்ற பொருள் போல்
மதிக்கப் படுவதை குறிப்பால் சொல்வதுபோல் உள்ளது
அதைபோலவே படத்தில் தாத்தா பக்கத்தில் பேரன் நிற்பது கூட
கேள்விக்கான சரியான விடை போலவும் உள்ளது
சூப்பர் பதிவு தொடர வாழ்த்துக்கள்

அன்புடன் நான் said...

கவிதை நச். பாராட்டுக்கள் நண்பா.

ஸ்ரீராம். said...

அருமை. காலத்தின் கட்டாயம்...! நிதர்சனக் கொடுமை.

சத்ரியன் said...

விஜய்,

புது சா(ஓ)ய்வு நாற்காலி செய்ய ஒப்பந்தம் குடுத்தாச்சு போல!

நியாயமான எதிர்ப்பார்ப்பு தான்.

வயசான அப்பாவை (அல்லது தாத்தாவை) ஒட்டடை ஏறும் படி ஒதுக்கி வைத்துவிட்டு மற்றொன்றைக் கொண்டுவர மாற்றுக்கு இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். பார்ப்போம்!

கமலேஷ் said...

பழகின பாதைதான் என்றாலும்
நடை புதிதாய் இருக்கிறது
விஜய் அண்ணே..

arasan said...

யாதர்தங்களை கூறிய உங்களுக்கு நன்றிகள்...
மின்னல் வாழ்க்கையில் பின்னோக்கி மீட்டி பார்க்க கூட நேரமில்லா வாழ்வு இது...
எங்கு சென்று முடியும்... எத்தனை இழப்புகளை தருமோ ????

விஜய் said...

@ ஹேமா

உண்மைதான் ஹேமா

நன்றி

விஜய்

விஜய் said...

@ ராமலக்ஷ்மி

ஆமாம் அக்கா

அவர்களுக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும்

நன்றி

விஜய்

விஜய் said...

@ # கவிதை வீதி # சௌந்தர்

தொடர் ஊக்கத்திற்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ ரமணி

மிகுந்த நன்றிண்ணே

தங்களை போன்றோரின் ஊக்கமும் வாழ்த்தும் என்னை மேலும் புடம் போடும்.

விஜய்

விஜய் said...

@ அரசு

நலமா நண்பா

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

ஆமாம் நண்பா

இளைய சமுதாயம் முதிய சமுதாயத்தின் அனுபவங்களை பாடமாக கொள்ள வேண்டும்

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ சத்ரியன்

கண்ணில் பார்க்கும் அவலங்களை கவிதையாகதான் வடிக்க முடிகிறது

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ கமலேஷ்

நலமா ?

புதிய நடை தான் தம்பி

சிலசமயம் நான் எழுதுவது பலருக்கு புரியாமல் போகிறது.

எனவே அவ்வப்போது இம்மாதிரி எழுதலாம் என்று இருக்கிறேன்

நன்றி தம்பி

விஜய்

விஜய் said...

@ அரசன்

சரியாக சொன்னீர்கள்

மிகுந்த நன்றி தம்பி

விஜய்