போதுமென்று
சொன்ன பிறகும்
இன்னொரு இட்லி வைக்கும்
அம்மாவின் பரிமாறலிலும்
வண்டியில் பாத்து போப்பாவெனும்
அப்பாவின் குரலிலும்
கடிந்தபின் கசியும்
மனைவியின் விழியோர நீரிலும்
தூக்கத்தில் சிரிக்கும்
குழந்தையின் முகத்திலும்
கடவுளை பல ரூபங்களில்
கண்டு கொண்டே இருக்கிறேன் .......
16 comments:
அருமை. பிரமாதம்.அழகு.
அருமை அருமை
கடவுளை எவ்வளவு அருகில்
பார்க்கத் தெரிந்தால் பார்க்க முடிகிறது
இதைத்தான்
இருக்கும் இடத்தைவிட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறாய்
ஞானத் தங்கமே என்றார்களோ
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
உண்மையான பாசம் (பக்தி) கொண்டோருக்குத் தோற்றமளித்துக் கொண்டேதான் இருக்கிறார் கடவுள். அருமை.
@ ஸ்ரீராம்
நன்றி நண்பா
விஜய்
@ ரமணி
மிகுந்த நன்றி சார், உங்களின் தொடர்ந்த ஊக்குவிப்பிற்கும், பாராட்டுகளுக்கும்
விஜய்
@ ராமலக்ஷ்மி
ஆமாம் அக்கா
உண்மையான பக்தியோ, பாசமோ கடவுளை காண்பிக்கும்
விஜய்
எல்லாமே நல்லாயிருக்கே விஜய்!
இதுக்கு மொதல் பரிசு
//கடிந்தபின் கசியும்
மனைவியின் விழியோர நீரிலும்//
அப்ப,
உங்க வீட்ல
நாலு கடவுள் மற்றும் ஒரு கவிஞன்
சரியாண்ணே...
ரொம்ப நல்லா இருக்குன்னே..
@ சத்ரியன்
வாங்க நண்பா
நீங்க எப்பவுமே தாய்குலத்துக்கு தான் பரிசு தருவீங்கன்னு தெரியும்
விஜய்
@கமலேஷ்
நலமா தம்பி ?
நீண்ட நாட்களாகி விட்டது பார்த்து.
மிகச்சரி தம்பி
நன்றி
விஜய்
மிக நல்ல வரிகள் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wordpress.com
Azhaga iruku anna :)
Thanks sis
vijay
அழகு கவிதை..குழந்தைகள் உண்மைகளின் சாட்சி
@ ஹேமிகிரிஷ்
நன்றி சகோ
விஜய்
Super ah irukku anna
Post a Comment