15.4.10

கற்றது காதலளவு



உன் சிணுங்கிய மொழி
தமிழ் பிடித்தது

உதிர்த்த சிரிப்பு
மின்னல் பிடித்தது

விசிறிய தாவணி
வேட்கை பிடித்தது

அசைந்த ரவிக்கை நூல்
காற்று பிடித்தது

ஒற்றிய உதடு
ஈரம் பிடித்தது

உன் பெயர்
கவிதை பிடித்தது

பற்றிய கைகள்
மின்சாரம் பிடித்தது

இறுக்கிய அணைப்பு
தியானம் பிடித்தது

நெஞ்சில் விரல் நகக்குறி
நிலா பிடித்தது

விழிகளின் ஊமை பாக்ஷை
மெளனம் பிடித்தது

எழுதிய கடிதங்கள்
கல்வெட்டு பிடித்தது

முத்துகளாய் வியர்வை
கடல் பிடித்தது

உச்சத்தில் உளறல்
காமம் பிடித்தது

ஆடையின் விடுதலை
கடவுள் பிடித்தது


26.3.10

அச்சச்சுவை




நிசப்த பின்னிரவின்
சூன்ய சுழிநிலை

கிளை முறிக்கும்
நெட்டிகள் பைசாசமாய் 

சில்வண்டின் சிணுங்கலொடுக்கும் 
ஆந்தையின் துணையறியுமலறல்

வெண்புகை மேகரூபம் 
நிறம் பிரித்தரியா நாயின் ஓலம்

செவிபுகவில்லை எதுவும் 
தன்னை மாய்க்கமுனைந்த 
ஒருவனுக்கு............



13.3.10

கடவுச்சொல்


நீ கடத்திய
உதடழுத்த மின்சாரம்
உயிர் நிரப்புமெரிபொருள்

தடாகத்தாமரைக்கு
தாவணி வேலி

சுக்ரரேகையில்
ஓடுமெனது பெயர்

உச்சிவெயிலில்
உன்னுளடங்கும்
வெயிலாய்

உன்னுள் கலந்த
எனதாண்மை
பூனைமுடிகளாய்

கணிணிக்கு மட்டுமல்ல
என் வாழ்க்கைக்கும்
உன் பெயரே கடவுச்சொல்

மடியில் கிடத்தி
மயிர்களைக் கோதி
இடு ஒரு முத்தம்
கன்னக்கதுப்பில்
உய்வேன் நானும்
ஒருநொடியேனும்........................





24.2.10

மாறுவேடப்போட்டி




எனது மகன் முதலாம் வகுப்பு மாறுவேட போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளான்.


தங்களது வாழ்த்துக்கள் தேவை.

14.2.10

காதல் விருது



உன் எச்சில் பட்டு
நெஞ்சணைத்த
உயிரியல் புத்தகம்

சோர்ந்து சுவடிழந்த நேரத்தில்
முகர்ந்து சிலிர்த்த
கைக்குட்டை

கைரேகைப்பக்கமும்
குரலிசை நாடாவும்

இவையனைத்துமெனது
சேமிப்புப்பெட்டகத்தில்
தொல்பொருளாய்

படமெடுத்த நிக்கானுக்கு தெரியும்
என் விழிகளின் காதல் தவிப்பை

கீட்டாமைன் கண்கள்
தந்த தீரா நோய்
ஃபிலோபோபியா

கடுங்குளிரில் உன்னையே
போர்த்திய பெண் பேகன் நீ


நீ தொட்டு விளையாடிய 
உன் மடிக்கணினி நான்

ஹேர்ப்பின் வளைவுகளில்
விழுந்து நெளிந்தவன்
இன்னுமெழவில்லை

ஃபேர்அண்ட்லவ்லியும்
உனது வியர்வையும்
கலந்த சுகந்தம்
இந்நாள்வரை
வேறெங்கும் நுகர்ந்ததில்லை

உன்னிதழ்களில்
வாசித்த மோர்சிங்
இன்னுமென்
ஜீவனின் ஜீகல்பந்தியாய்

நான் விரும்பி
நீ குத்திய
மூக்குத்தி
நோஸ்டால்ஜிக் வலிகள்

இதய எக்ஸ்ரேக்களை
நான் அனுமதிப்பதில்லை
கதிர் வீச்சு
உனக்காகாதென்பதால்

ஆழ்மன டீட்டா நிலையில்
பதிந்த உன்னை
ஆல்பா நிலையில்
நிறுத்தியிருக்கிறேன்

நானும் நீயும்
அவரவர் வீட்டில்
அழகாய் வாழ்கின்றோம்
தோற்ற காதலருலகின்
செவாலியே சிவாஜிக்களாய்.........................