கால் சதங்கை கலத்த நாட்களும்
கண்ணசைவில் கரைந்த நாட்களும்
கைப்பிடித்து உறைந்த நாட்களும்
நிலைத்த பசுமை
முன்பகலில் முந்தானை இழுத்ததும்
நண்பகலில் நகம் சுருக்கியதும்
கருமிரவில் சொடுக்கெடுத்ததும்
காகிதம் கனக்கும் கவிதைகள்
நினைவுகள் நிதர்சனம்
நிதம் உன் வலி
காதலில் வென்று வெறுமையாவதைவிட
தோற்று துவழ்தல் சுகமெனக்கு
ஏனென்றால்
நொடிக்கொருமுறை உன் நினைவெனக்கு
அன்று
உயிர்மெய் கலந்த பொருளாய்
இன்று
தாமரை இலை தண்ணீர் போல் நாம்
17 comments:
nallaayirukkuthu!!
thanks a lot
என்ன விஜய் நல்லாத்தானே இருந்தீங்க.
இப்போ என்னைப்போல ஆயிட்டீங்க நீங்களும்.
காதல் தொத்து வியாதியா என்ன !
கவிதை முழுதுமே சூப்பர்.
நன்றி ஹேமா. பழைய நினைவுகள். நீங்கள் எழுதிய தலைப்புகளை பார்த்து நானும் கொஞ்சமாவது கவிதை எழுத வருதான்னு ட்ரை பண்றேன்.
நல்லா இருக்குங்க!
நன்றி நண்பரே.
அருமை..... வாழ்த்துக்கள்.........
நல்ல கவிதைங்க பாரட்டுக்கள்.
வாழ்த்துக்கு நன்றி நண்பரே..............
ம்ம்ம்ம்....நேசனுக்கு நீங்கள் இட்ட பின்னூ பார்த்தே இங்கு வந்தேன்... ம்ம்ம்ம்ம்ம்ம்... தாமரை இலை தண்ணீர் போல் நாம்.... போங்கள்!!
:
:
டிஸ்கி:
ஒன்று கூடத் தேறவில்லை..
சுத்தப் பேத்தல்... என்றுதான் எழுத வந்தேன்.. ஆனால் ஏதோ ஒன்று தடுத்து விட்டது..!
நன்றி நண்பரே .......................
*//அன்று
உயிர்மெய் கலந்த பொருளாய்
இன்று
தாமரை இலை தண்ணீர் போல் நாம்//*
நச்சென்ற வரிகள்!
காகிதம் கனக்கும் கவிதைகள்
இதயம் லேசாகி
வானில் பறந்த
நினைவுகளை
நினைத்து எழுதியபோது
கனத்த வரிகள்..
காரூரன்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.......
சங்கர், உங்களது பின்னூட்டமே எப்பொழுதும் கவிதைதான். மிக்க நன்றி.
dei gunda,over feelinga irukku.-jai
பீலிங் தாண்டா கவிதை.
Post a Comment