30.9.09

மதம்


அகத்தின் அளவீடு
இனத்தின் குறியீடு
வரலாற்று உள்ளீடு
பூகோள மாறுபாடு

ஓர் இறைவன்
ஓராயிரம் மதங்கள்



கிளைகள் நூறு
வேர் ஒன்று
கிளைகளுக்குள் கிளர்ச்சியேன்



உன் மதத்தால்
உன்மத்தம் பிடித்தால்
அம்மதம் உடன் உதறு



சகரத்த சகோதரனே
சம்ரக்ஷணம் பழகு
சம்ஹாரம்  மற



சமதர்ம சமுதாயமே
நிர்மால்ய நிதர்சனம்




நூறு தலைமுறைக்கு முன்
நீ எந்த மதம் அறிந்து சொல்



சிலுவையும் சீக்கியமும்
அல்லாவும் ஆறுமுகனும்
கை கோர்ப்பதே
தீவிர வியாதிக்கு மருந்து



தன்பசிக்கு பிறர் வயிறு கிழிக்காமல்
தானேரிந்து பிறர்க்கொளிரும்
மெழுகாய் மிளிர்



கார்டெக்ஸ் கழிவுப்பதிவை
விரைந்து வெளியேற்று



இதயம் செலவழி
அன்பை வரவு வை  



மத நல்லிணக்கமே
மனித நல் இலக்கணம்



மதங்களின் வேர்
மண்ணை திங்கட்டும்
மனிதத்தை அல்ல ...................

10 comments:

Thenammai Lakshmanan said...

விஜய்
இந்த இரண்டும் அட்டகாசம்

//மதங்களின் வேர்
மண்ணை திங்கட்டும்
மனிதத்தை அல்ல// ...................
//கார்டெக்ஸ் கழிவுப்பதிவை
விரைந்து வெளியேற்று//

ஆமா நீங்க மூளையை இப்படிச் சொன்னது நைஸ்

விஜய் said...

முதல் வாழ்த்துக்கு நன்றி. ஹேமாவுக்கு அடுத்து நீங்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறீர்கள். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

சந்தான சங்கர் said...

/மதங்களின் வேர்
மண்ணை திங்கட்டும்
மனிதத்தை அல்ல/

மனித நேய
மருந்திடாத
எம்மதமும்
எமக்கு
சம்மதமில்லை..

சமுதாய
விழிப்புணர்வுக்கு
வாழ்த்துக்கள்
விஜய்..

விஜய் said...

வாழ்த்துக்கு நன்றி சங்கர்.

Jaleela Kamal said...

//நல்ல பதிவு //



நேரமின்மையால் பதிவை பார்க்க முடியல மெதுவா பார்க்கிறேன். நீங்கள் கேட்ட கேள்விக்கு அந்த‌ ப‌திவில் நீங்க‌ள் ப‌தில் க‌ம் என்ப‌தை தேடி போடு இருக்கேன்.கொஞ்ச‌மா முய‌ற்சி செய்து பாருங்க‌ள்.

விஜய் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் தேங்க்ஸ் தோழி.

ஹேமா said...

விஜய்,இன்றுதான் விடுமுறை முடித்து வந்திருக்கேன்.சுகம்தானே.

மனிதன் எப்போதுமே மனிதனாய் வாழ நினைக்காமல் தானே ஒரு கடவுள் மதம் என்று உருவாக்கி அதற்குள் தானே அகப்பட்டு அவதிப்படுகிறான்.வெளியில் இருக்கும் அமைதியை அங்கு தேடுகிறான்.யார்தான் என்ன செய்யமுடியும் !

விஜய் said...

சுகம் தான் ஹேமா.

அன்புடன் மலிக்கா said...

சகோதரரே நாம் அனைவரும் விரும்புவது மனிதமான மனிதர்களையே. மதம்பிடித்தமதவாதிகளையல்ல

சகோதரத்துவத்தோடு வாழ்ந்துகாட்டுவோம் என்றென்றும்..

விஜய் said...

நன்றி சகோதரி

விஜய்