3.10.09

நிறமி



பச்சை
பசித்த பசுவயல் 
அழித்த நாற்கல்


கருப்பு 
உழைப்பின் உயர்நிறம் 
மணச்சந்தையில் மட்டும் மறுக்கப்படும் 


நீலம்
வானின் பிம்பம் 
ஆழகல ஆழியில் 


சிவப்பு 
வெற்றிலைபாட்டி
விதவைக்கு வெறுநெற்றி


வெண்மை 
தாய்மையின் முதல் திரவம் 
முடிவிலும் ஊற்றப்படும்.

18 comments:

ஹேமா said...

வேற்றுமை நிறங்களுக்கும் ஒரு கவிதை.நிறத்தாலும் பிரிவு.
இனத்தாலும் பிரிவு.பாரதி வேண்டும் மீண்டுமாய் எல்லா நிறமும்,எல்லா இனமும் ஒன்றுதான் என்று சொல்ல.

கடைசிப் பந்தி மனதை நெகிழ்வாக்கியது விஜய்.

விஜய் said...

நன்றி ஹேமா.

Jerry Eshananda said...

வலைத்தளம் மிரட்டலா இருக்கு.

விஜய் said...

அய்யோ, அப்படி எல்லாம் ஒன்னும் மிரட்டலிங்க.

தங்கள் வருகைக்கு நன்றி.

அன்புடன் நான் said...

நல்லாயிருக்கு கவிதை.

விஜய் said...

நன்றி தோழரே .........

Thenammai Lakshmanan said...

ஐந்து நிறங்களும் அருமை விஜய்

சந்தான சங்கர் said...

உங்கள்
எண்ணங்களின்
வண்ணங்கள்
அருமை..

வாழ்த்துக்கள் விஜய்.

விஜய் said...

ஐந்து நிறங்களும் அருமை விஜய்

நன்றி தோழி

உங்கள்
எண்ணங்களின்
வண்ணங்கள்
அருமை..

வாழ்த்துக்கள் விஜய்.

நன்றி சங்கர்

நாம் ஒருவருக்கு ஒருவர் அளிக்கும் பாராட்டுதல்கள் நம்மை இன்னும் உயரத்துக்கு கொண்டு செல்லும்.

வாணி நாதன். said...

தங்களின் கவிதைகளை வாசித்தேன் மிகவும் அருமை. மேலும் தொடர என் வாழ்த்துக்கள்...

விஜய் said...

மிக்க நன்றி தோழி

முகமூடியணிந்த பேனா!! said...

அருமை...

விஜய் said...

மிக்க நன்றி தாம்ஸ்

காரூரன் said...

வண்ணங்களின் எண்ணங்களை படைக்கிறாய் நீ!
தாய் மையை அருமையாய் வடித்த கடைசி வரிகள்.

விஜய் said...

மிகுந்த நன்றி நண்பரே ........

கா.வீரா said...

nice

கா.வீரா said...

nice

விஜய் said...

@ வீரா

நன்றி நண்பா முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

விஜய்