22.10.09

சக்கர வண்டிஒரு வயசில
ஆட்டை வித்துஆடுகுதி வண்டி

மூணு வயசில
உங்காத்தா மூக்குத்தி முறிச்சு
மூணு சக்கர வண்டி

பதிமூணு வயசில
நாலு மூட்டை கம்பு வித்து
சைக்கிளு


இருபது வயசில
கடைசிக்காணி வித்தப்ப
மோட்டார் சைக்கிளு

வேலை கிடைச்சு
புதுக்காரு வாங்கின


பொண்டாட்டியும்
புதுவீடும்
கட்டுன


பேத்தியோட வானத்துல
பறந்து அசல்நாட்டுக்கு
போயிட்ட


ஒத்தையாய் தனிச்சிருக்கேன்
சக்கர வண்டியி................................

27 comments:

velji said...

கடைசி யாத்திரையை காணொளியில் கண்டு,வாக்கரிசியை கூரியரில் அனுப்பி வைப்பானோ?!
எப்படியோ வாழ்க்கைச் சக்கரம் சுற்றுகிறது!
நல்ல பதிவு.
பொண்டாட்டி கட்டின...வீடு கட்டின....
அருமை!

கவிதை(கள்) said...

அப்படித்தான் இன்றைய சமுதாயம் செல்கிறது நண்பரே

மிக்க நன்றி

விஜய்

venkat said...

supper

கவிதை(கள்) said...

நன்றி வெங்கட்

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

விஜய்

சந்தான சங்கர் said...

காலச்சக்கரம்
ஜனித்த சிறகுகளுடன்
பறந்தன உறவுகள்,

என் வாழ்க்கை சக்கர நாற்காலியில்
சிறகுமின்றி, உறவுமின்றி...

கவிதை(கள்) said...

நன்றி சங்கர்

உங்களின் அழகான கவிதை பின்னூட்டத்திற்கு

விஜய்

ஹேமா said...

விஜய் இப்போ இதுதான் நிதர்சன் வாழ்வாய் சபிக்கப்பட்டிருக்கிறது தமிழனுக்கு.நாங்கள் அனுபவித்துக்
கொண்டிருக்கிறோம்.தொலபேசியில் மாத்திரம் சுகம் விசாரிக்கிறோம்.
எங்கள் வீட்டிலேயே நாலைப் பெற்றும் ஒரு பிள்ளையோடு மட்டுமே என் பெற்றோர்.கட்டாயக் கைதிகளாய் !

சேவியர் said...

பிரமாதம். படம் ரொம்ப சூப்பர்

கவிதை(கள்) said...

நன்றி ஹேமா

காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்

விஜய்

கவிதை(கள்) said...

சேவியர் தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

விஜய்

இறக்குவானை நிர்ஷன் said...

யதார்த்தத்தை சொல்லியியிருக்கிறீர்கள். படைப்பு தொடரட்டும்

க.பாலாசி said...

உண்மையில் உங்களின் கவிதைப்பாணியை ரசித்தேன்.

வேகமாய் சுழலும் இவ்வுலகத்தின் நிஜமுகம் இதுதான். எதோவொரு தேடலில் ஓடினாலும் நிம்மதியை உதிர்த்துக்கொண்டேதான் ஓடுகிறோம்...

நல்ல கவிதை....வாழ்த்துக்கள்...அன்பரே...

க.பாலாசி said...

தமிழ்மணத்திலும் இணையலாமே....

கவிதை(கள்) said...

நிர்ஷன் தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

விஜய்

கவிதை(கள்) said...

க.பாலாசி தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

கண்டிப்பாக இணைகிறேன் நண்பரே

விஜய்

ஜீவன் said...

அருமை ..!

கவிதை(கள்) said...

நன்றி ஜீவன்

சி. கருணாகரசு said...

கனமான சிந்தனை நல்ல கவிதை... வாழ்த்துக்கள்

கவிதை(கள்) said...

தங்களின் மதிப்பு மிகு வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே

இரசிகை said...

ippadilaam nadakkak koodaathu...
aanaal,ippadiththaan nadakkirathu!!

vali...

கவிதை(கள்) said...

amaam rasigai

nandri

vijay

" உழவன் " " Uzhavan " said...

//ஒத்தையாய் தனிச்சிருக்கேன்
சக்கர வண்டியில ................................ //
 
நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள்

கவிதை(கள்) said...

தங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே

விஜய்

Rajalakshmi Pakkirisamy said...

//பொண்டாட்டியும்
புதுவீடும்
கட்டுன//

Good :)

கவிதை(கள்) said...

நன்றி தோழி

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

விஜய்

Cliffnabird said...

Nice. With your permission can i use this picture to write one? Recently i wrote one check this http://cliffnabird.blogspot.com/2009/09/blog-post_30.html

கவிதை(கள்) said...

yes friend u can use

i read ur kavithai

It is very nice

best of luck

vijay