19.10.09

திருமங்கை


குரோமோசோம்கள் குழம்பிய
குளிர் கருக்கள்


ஹார்மோன் குறைநீட்சியால்
மலராத மொட்டுக்கள்


பிறழ்விந்தால் பிறந்த
கூவாக குயில்கள்


நவதுவாரங்களால் நாம்
அனைவரும் நவமே
அறம் பிளந்து
இகழ்தல் முறையோ


பால் உணவிற்காக
அரக்கர்களின்
பாலுணர்வு தணிக்கும்
அசிங்க அவலங்கள்


அரவாணிகள் என்பது
அரைஞானிகளின்  அறிவு
கலைவாணிகள் என்பது
முற்றுணர்ந்தோர் மூச்சு


சரிவிகித சமன்பாட்டில்
ஒருவிகிதமாவது தருவோம்


நஞ்சற்ற நங்கைகளுக்கு
நேசக்கரம் நீட்டுவோம் 

16 comments:

thenammailakshmanan said...

குரோமோசோம்கள் குழம்பிய
குளிர் கருக்கள்


ஹார்மோன் குறைநீட்சியால்
மலராத மொட்டுக்கள்


aarambamay arumaiyaay irukirathu vijay

siriya varthaigalil porul pothintha arthangal

superb ijay

Anonymous said...

அவசியம் கரம் நீட்டுவோம்...

ஹேமா said...

விஜய் இவர்கள் பற்றிய அனுதாபம் எப்போதும் எனக்குண்டு.என் பதிவில் அவள்(ன்) என்றொரு கவிதை எழுதியிருக்கேன்.பாருங்க.இப்படிக்கு றோஸ் இப்போது றோஸ் நேரம் இணையத்தில் தவறாமல் பார்ப்பேன்.

உங்கள் கவிதை அவர்கள் வலியை அழகாய்ச் சொல்லியிருக்கிறது.

http://kuzhanthainila.blogspot.com/2008/04/blog-post_5554.html

கவிதை(கள்) said...

நன்றி நன்றி நன்றி

எனது மூன்று சகோதரிகளுக்கும்

@ ஹேமா
படித்தேன். உணர்ச்சி மயமாக உள்ளது என் கவிதையை விட

சந்தான சங்கர் said...

//சரிவிகித சமன்பாட்டில்
ஒருவிகிதமாவது தருவோம்//

நல்லா சொல்லியிருக்கீங்க..

சேலத்தில் அரவாணிகளுக்கு ஒரு
மெஸ் வச்சு கொடுத்திருக்காங்க
அந்த கடையின் பெயர் "மென்மை"
உண்மையில் அந்த கடையில் இட்லி அவ்வளவு
மென்மையே..

மென்மையும் ஒரு மேன்மையே..

கவிதை(கள்) said...

நன்றி சங்கர்

நானும் படித்தேன் சங்கர்.

விஜய்

ஊடகன் said...

நிலை தடுமாறி பிறந்தவர்கள் தன ஒத்துக்கொள்கிறேன்.......
ஆனால் அவர்கள் செய்யும் சேட்டையை பார்த்தல் நீங்கள் பேசமாடீர்கள்..........

கவிதை(கள்) said...

நன்றி ஊடகன்

சூழ்நிலையும் ஒரு காரணம்

velji said...

மூளை வள்ர்ச்சி குன்றிய குழந்தைகளையும்,இன்னும் சில வருடங்கள் வரை இருக்கலாம் என மருத்துவர்களால் கைவிட்ப்பட்ட குழந்தைகளையும் பாராமரிக்கும் சமூகம் இந்த மக்களை உடனடியாக வெளியேற்றிவிடும் கொடூரம்தான் சகல அவலங்களுக்கும் அடிப்படை.

அக்கறையான பதிவு.

கவிதை(கள்) said...

நன்றி வேல்ஜி
தங்களது வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி

விஜய்

இரசிகை said...

gud........

கவிதை(கள்) said...

thanks rasigai

vijay

" உழவன் " " Uzhavan " said...

//பிறழ்விந்தால் பிறந்த
கூவாக குயில்கள் //
 
கவிதை நல்லாருக்கு

கவிதை(கள்) said...

நன்றி நண்பர் உழவன் அவர்களே தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

விஜய்

T.N.MURALIDHARAN said...

வேதனைகளை வெளிப் படுத்தும் கவிதை.நிச்சயம் அவர்களை தக்க முறையில் நாம் நடத்த வேண்டும். அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளவேண்டும். மனதை தொட்டது கவிதை நன்றி விஜய்

விஜய் said...

நன்றி நண்பா

விஜய்