7.10.09

அழகின் அலகீடு


அழகு 

புலியின் பதுங்கு பாவனை

யானையின் முன் ஆசி நீட்சி 

நாயின் பின் நன்றி நவிலல் 

பால் குடிக்க பறந்தோடும் கன்று 

தேனீயின் கழிவு 

மண்புழுவின் தாமிரமேனி 

கூவுகுயிலின் சமிக்ஞை 

மருண்ட இருளோட்டிடும் செங்கதிர்

மொட்டைமாடியில் முழுநிலவு 

பசும்வயலில் கிழிசட்டை பூதம் 

நிமிர்ந்த மலையின் ஆரம்

அடர்ந்த காட்டில் மின்மினி

மரித்த பாட்டியின் முகவரிகள்

சிசுவின் தூக்கசிரிப்பு

செயற்கை ஒளி அறுந்தபின் லாந்தர்

கவிதையில் காதல்

என்னவளின் கோண வகிடு

கூடலின் வியர்வை 

கோள்களில் வளையச்சனி

கடவுளில் கந்தன் 

மொழியில் தமிழ்

தமிழில் ஈழம் 

ஈழத்தின் வீரம்


பிரபஞ்ச பிழையான நாம் ....................................




19 comments:

விஜய் said...

தொடர்ச்சியாக எனது ஆத்திசூடி, மதம், நிறமி, அழகின் அலகீடு ஆகிய கவிதைகளை tamilishல் popular ஆக செய்து வாக்களித்த அனைத்து கவியுள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஹேமா said...

விஜய்,எங்களுக்கு ரசிப்பவையாய் இருந்தாலும் அடுத்தவர் பார்வையில் அது பிழையாகவோ!கோணல் பார்வையாக்கும்.பேசாமல் விடுங்கள்.

அத்தனை உங்கள் ரசனையோடு என் ரசனையும் இணைந்து
கொள்கிறது.அவ்வளவு அற்புதம்.

Anonymous said...

//பிரபஞ்ச பிழையான நாம் ....................................//

கவிதையை முழுமையாக்கிய வரிகள்..

சந்தான சங்கர் said...

அளவிடமுடியாத
அழகு..

//செயற்கை ஒளி அறுந்தபின் லாந்தர்
கவிதையில் காதல்//
இயற்கைஒளி மரித்தபின்
லாந்தர் கவிதையில் காதல்..
இதுவும் சரியா?

மீண்டும் அழகு விஜய்...

விஜய் said...

@ ஹேமா
மிக்க நன்றி ஹேமா

@ தமிழரசி
தமிழே வாழ்த்து கூறிவிட்டது, நன்றி.

@ சங்கர்
சங்கர் கூறினால் எல்லாம் சரிதான்.
ரசித்ததுக்கு நன்றி.

விஜய் said...

@ ஹேமா

ஹேமா நிஜமாகவே popular ஆக வோட்டு போட்டுருக்காங்க.

தமிழ் அமுதன் said...

/// தமிழரசி said...

//பிரபஞ்ச பிழையான நாம் ....................................//

கவிதையை முழுமையாக்கிய வரிகள்..//

repeet

விஜய் said...

நன்றி நண்பரே

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அருமையான அழகான கவிதை!

விஜய் said...

நன்றி நண்பரே

Thenammai Lakshmanan said...

விஜய் அழகு மிக அழகு
என்னவளின் கோணல் வகிடு

அடடா உங்கள் ரசனை அருமை

im in Dubai Vijay

so i put reply in a random vision
due to lack of time

so now im here to greet u vijay

arputham

Thenammai Lakshmanan said...

விஜய் அழகு மிக அழகு
என்னவளின் கோணல் வகிடு

அடடா உங்கள் ரசனை அருமை

im in Dubai Vijay

so i put reply in a random vision
due to lack of time

so now im here to greet u vijay

arputham

விஜய் said...

உங்களது வேலைபளுவிற்கு இடையில் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழி

சந்தான சங்கர் said...

தேவதையின்
வரமிட்டிருக்கின்றேன்
உங்கள்
கரமிட்டுச்செல்லுங்கள்..

ஊடகன் said...

//மொழியில் தமிழ்
தமிழில் ஈழம்
ஈழத்தின் வீரம்//

அருமை, அழகான கவிதை!

விஜய் said...

புலவன் புலிகேசி said...

அருமை.....


நன்றி நண்பா `

விஜய் said...

ஊடகன் said...

//மொழியில் தமிழ்
தமிழில் ஈழம்
ஈழத்தின் வீரம்//

அருமை, அழகான கவிதை!


தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே...............

இரசிகை said...

aththanaiyum azhagu!!

விஜய் said...

நன்றி ரசிகை

விஜய்