24.10.09

யுகப்பொறுமை



விதையின்
பொறுமை
விருட்சம்

பூமியின்
பொறுமை
சுழற்சி

ஆழியின்
பொறுமை
அலை

சிந்தனையின்
பொறுமை
புரட்சி

நாட்களின்
பொறுமை
வருடம்

காதலின்
பொறுமை
கவிதை

காமத்தின்
பொறுமை
கடவுள்

உறங்கும்
பொறுமை
இறப்பு

காற்றின்
பொறுமை
தென்றல்   

கல்லின்
பொறுமை
சிற்பம்

தாய்மையின்
பொறுமை
நாம் ..............................................................


13 comments:

சந்தான சங்கர் said...

//தாய்மையின்
பொறுமை
நாம் //

பொறுமைகளுக்கு எல்லாம்
பெருமை இது..

பெண்மையின் பொறுமை
தாய்மையின் பெருமை..

இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
உங்கள் வரிகள் நிச்சயமாய்
கவிதைக்கு பெருமை..

நெகிழ்ச்சியுடன்

சங்கர்..

velji said...

/காமத்தின்
பொறுமை
கடவுள்

உறங்கும்
பொறுமை
இறப்பு/

கவிதை நல்லாயிருக்கு.

இது ரொம்ப நல்லாயிருக்கு.

தமிழ் அமுதன் said...

கவிதை ..!
அருமை ..!

விஜய் said...

@ சங்கர்

நெகிழ்ச்சிக்கும் வாழ்த்துக்கும் நன்றி

@ வேல்ஜி

நன்றியும் வாழ்த்தும்

@ ஜீவன்

நன்றி ஜீவன்

ஹேமா said...

விஜய் வேலை எப்பவும்
போலத்தான்.நேத்து உங்க பக்கம் வந்து பாக்கலதான்.இப்போகூட வேலைக்குப் புறப்படுறேன்.

ஒவ்வொரு வலியின் பின்னனியிலும்குப் ஒவ்வொரு சுகம் கிடைப்பதுபோல உங்கள் கவிதையின் ஒவ்வொரு வார்த்தைகளும்.சின்னதா அருமையா வடிச்சிருக்கீங்க விஜய்.

விஜய் said...

நன்றி ஹேமா

புலவன் புலிகேசி said...

//சிந்தனையின்
பொறுமை
புரட்சி //

உண்மைதான் நண்பரே..பலப் புரட்சியாளர்கள் நல்ல சிந்தனையாளர்கள் தான்.....

விஜய் said...

தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா

விஜய்

அன்புடன் நான் said...

சின்னதா அழகா...எளிமையாய் நச்சின்னு இருக்குங்க... வாழ்த்துக்கள்

விஜய் said...

நன்றி நண்பர் அரசு அவர்களே

விஜய் said...

thanks rasigai

ராமலக்ஷ்மி said...

அத்தனையையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

//தாய்மையின்
பொறுமை
நாம் //

அற்புதம்.

வாழ்த்துக்கள்.

விஜய் said...

தங்களின் பாராட்டு எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது

மிக்க நன்றி

விஜய்