5.10.09

நடுவர்க்க நரகம்



நடுவர்க்க நடுக்கடலில் 
நாங்கள் 
இருகரையும் பச்சை 

எதிர் வீடு எல்சிடி 
கண் எரியும்
  
பின்வீட்டு வாஷிங்மெஷின்
மனம் துவையும் 

பண்டிகை கொண்டாட்டங்கள் 
நகைகள் ஹிந்தி படிக்கும் 


ஏங்கி ஏங்கி 
மனசு தூங்கி போகும்

திடீர் செலவு 
திக்கற்ற நிலை 

எண்ணிய பின் சம்பளம் 
எண்ணவே முடியாது 

ஊர் முழுதும் பழக்கம் 
அடிக்கடி மாறிய வீடுகள் 

ஆண்டவா ................................
மறுபிறப்பில் ஏழையாய் அல்லது வளமையாய்
படைத்திடு 

நடுக்கடல் வாழ்க்கை நரகமென்பதால்................ 



விஜய் @ 98947 60636


15 comments:

ஹேமா said...

ஒரு மத்தியதரக் குடுடும்பத்தின் மன ஏக்கங்கள் கவிதையைக் குடைந்து எடுத்திருக்கிறது.சமூகப்பார்வை அதிகமாகிறது விஜய்.

விஜய் said...

நன்றி ஹேமா

Thenammai Lakshmanan said...

எண்ணிய பின் சம்பளம்
எண்ணவே முடியாது

well done vijay
excellent expression

விஜய் said...

மிகுந்த நன்றி தோழி

புலவன் புலிகேசி said...

//ஆண்டவா ................................
மறுபிறப்பில் ஏழையாய் அல்லது வளமையாய்
படைத்திடு

நடுக்கடல் வாழ்க்கை நரகமென்பதால்................ //

அருமையாக சொன்னீர்கள் விஜய்...வாழ்த்துக்கள்....

விஜய் said...

நன்றி நண்பா ............

பின்னோக்கி said...

அருமை.

//எண்ணிய பின் சம்பளம் எண்ணவே முடியாது

அற்புதமான, நிதர்சனமான வரிகள்.

swartham sathsangam said...

தங்கள் வரவுக்கு நன்றி. பதஞ்சலி மகரிஷி அவர்களுக்கு தனியாக என்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆலயம் உள்ளது. மதுரையின் காளஸ்திரி என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தின் சிறப்புகள் என்ன முடியாதது. இதை தலைமையாக கொண்டு எங்கள் யோககேந்த்ரம் செயல்படுகின்றது.

விஜய் said...

நன்றி பின்னோக்கி நண்பரே

Anonymous said...

இத்தனை நாள் எங்கிருந்தாய் எழுத்தே.... இனி நல் எதிர்க்காலம் உனக்குண்டு.... வாழ்த்துகள்....

விஜய் said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழி

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

Suuuuuuuuuuper!

விஜய் said...

Thanks Friend

இரசிகை said...

sabaash.................

விஜய் said...

thanks rasigai

vijay