12.10.09

பிறவா மகள்ஏன் பிறக்கவில்லை மகளே ?

பிஞ்சு பாதம் தாங்கி
உன்னில் கடவுளை காணவும்

பார்பியுடன் நீ தூங்க
நான் தூங்காது உன்னை ரசிக்கவும்

பள்ளி அனுப்பி
பரிதவித்து காத்திருக்கவும்

சொந்தம் கூட்டி பூப்புநீராட்டி
மனம் கர்விக்கவும்

குருவியாய் அலைந்து
குண்டுமணிகளாய் பொன் சேர்த்து
புக்ககம் அனுப்பி
புவியதிர விம்மவும்

தலைப்ரசவத்தில் என்னுருவில்
பெயரனை காணவும்

என் மூச்சுதிரும் வேளையில்
உவந்து உன் உச்சி மோறவும்

என்னுள் வெளிவராதுறைந்த
என் மகளே

மறுசென்மத்தாயாய் வா

காத்திருக்கிறேன் ........................................


10 comments:

ஹேமா said...

//தலைப்ரசவத்தில் என்னுருவில்
பெயரனை காணவும்

என் மூச்சுதிரும் வேளையில்
உவந்து உன் உச்சி மோறவும்//

முழு வரிகளிலுமே மகளுக்கான ஏக்கம்.என்ன விஜய்,மகள் வேண்டித் தவமோ !அழகான காத்திருப்பு.
வருவாள் சரஸ்வதியே பாருங்களேன் உங்கள் மகளாக.

இப்படியான கருக்கள் என் மரமண்டைக்கு வருதில்லையே கவிதை எழுத.சோகம் சோகம்ன்னு எழுதி எல்லார்கிட்டயும் நல்லா வாங்கிக்கிறேன்.பரவால்ல.சோகம் எழுதவும் ஒரு ஆள் வேணும்தானே.
என்ன சொல்லுங்க விஜய் !

கவிதை(கள்) said...

எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள். sterilization முடிந்துவிட்டது. ஆகவே தான் ஏக்கம்.

மறுஜென்மத்திலாவது பெண் குழந்தையை ஆண்டவன் தரவேண்டும்.

கவிதையின் முதல் வலியே சோகம் தானே ஹேமா.

தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி.

thenammailakshmanan said...

எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள். sterilization முடிந்துவிட்டது. ஆகவே தான் ஏக்கம்.

மறுஜென்மத்திலாவது பெண் குழந்தையை ஆண்டவன் தரவேண்டும்.

ennakkum appadiththaan vijay

so i can under stand ur pain

muzumaiyaana pakirvu

manam thirantha yathaarththamaana vaarththaigal

nice vijay

கவிதை(கள்) said...

மிக்க நன்றி தோழி.

அடுத்த கவிதை உங்களைப்போல் ஆங்கிலம் கலந்து எழுதப்போறேன்.

நன்றி.

விஜய்

ஹேமா said...

எனக்குப் பிடிக்கல போங்க விஜய்.
இவ்வளவு மனசில ஆசையும் ஏக்கமும் இருக்கு.இன்னொரு குழந்தையில் மகளை எதிர்பார்த்திருக்கலாம்.

கவிதை(கள்) said...

பொருளாதாரம் தான் காரணம் ஹேமா. நினைப்பதெல்லமா நடந்து விடுகிறது ?

சந்தான சங்கர் said...

//குருவியாய் அலைந்து
குண்டுமணிகளாய் பொன் சேர்த்து
புக்ககம் அனுப்பி புவியதிர விம்மவும்//

அருவிபோல் ஆசைகள்
அன்பெனும் மலையில்
இருந்து வீழ்ந்து
மழலை முத்தெடுக்க

பிறவா மகள்
மனதில் பிறந்த கரு..

நன்றி விஜய்...

கவிதை(கள்) said...

நன்றி சங்கர்.

இரசிகை said...

//புக்ககம் அனுப்பி
புவியதிர விம்மவும்//

pidichchirunthathu.......:)

கவிதை(கள்) said...

கவிதை படித்ததற்கும் பிடித்ததற்கும் நன்றி ரசிகை

விஜய்