வெள்ளை மனதின்
கருப்பு ரகசியம்
கோண வாழ்க்கையின்
சதுர வரலாறு
முன் நினைவுகளின்
முடிவுறா பக்கங்கள்
உயிர் கரைத்த காதல்
கவிதை ஒத்திகை
அகம் சிலிர்த்த நட்பு
புலம் பெயர்ந்த வீடு
திரை மறைவரங்கு
கருமிருட்டு வெண்புகை
மயான மதுநுரை
குரங்குபெடல் குதியாட்டம்
வெட்டிய வகுப்புகள்
கலங்கியதால்
கரைந்த எழுத்துகள்
மரத்தும் மரித்தும் போகாது
மண்ணுள்ளவரை ..................
29 comments:
kandippaa.........
நன்றி ரசிகை
விஜய்
ஹேமா உங்கள் கமெண்ட் ஏன் நீக்கி விட்டீர்கள்
விஜய்
விஜய் லிபி என்றால் என்ன? டைரியா ?
மனதின் முடிவுறாப் பக்கங்களை பதிவு செய்து வைத்துக்கொள்ளும் ஒரு கோவை.அந்தரங்கக் கோவை.நான் சின்ன வயசில எழுதி அப்பாகிட்ட பிடிபட்டபிறகு எழுதாமலே விட்டிட்டேன்.கவிதை சின்னதா அழகா இருக்கு விஜய்.
நன்றி ஹேமா
லிபி என்றால் எழுத்து
விஜய்
விஜய் 2 - 3 எழுத்துப்பிழை வந்திடிச்சு.அதான்.இப்ப சரிதானே.
நல்லவேளை திட்டிவிட்டீர்களோ என்று நினைத்துவிட்டேன்
நன்றி நன்றி நன்றி
விஜய்
அருமையான கவிதை.
//முன் நினைவுகளின்
முடிவுறா பக்கங்கள் //
அழகு வரிகள்.
தங்களின் முதல் வருகைக்கும் உளம் கனிந்த வாழ்த்துக்கும் மிக்க நன்றி
விஜய்
பச்சை டயரி
வெள்ளை எழுத்துக்கள்..
நினைவுகள்..
நன்றி விஜய்..
உங்க டைரிக்கும்
உங்களுக்கும்
இன்னும்
உறக்கம் வரவில்லை போல
மிக்க நன்றி சங்கர்
ஆமாம் சங்கர் இன்னும் உறங்கவில்லை
விஜய்
கோண வாழ்க்கையின் சதுர வரலாறு...அருமை.
நல்ல கவிதை.
நன்றி வேல்ஜி
வரிகள் அருமை..... வாழ்த்துக்கள்
எனக்கு டைரி எழுதும் பழக்கம் இல்லை. ஆனால் அதற்காக பலமுறை வருதிதத்தப்பட்டதுண்டு...நல்லா இருக்கு
நன்றி சந்ரு
தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
விஜய்
நன்றி
புலவன் புலிகேசி
விஜய்
கோண வாழ்க்கையின்
சதுர வரலாறு //
மிக அருமை ரசித்தேன்... வழ்த்துக்கள் விஜய்.
நன்றி நண்பர் அரசு
விஜய்
/வெள்ளை மனதின்
கருப்பு ரகசியம்/
ரசித்தேன் கவியை..
" அன்புடன் மலிக்கா said...
/வெள்ளை மனதின்
கருப்பு ரகசியம்/
ரசித்தேன் கவியை.."
தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி
விஜய்
//மரத்தும் மரித்தும் போகாது
மண்ணுள்ளவரை ..................//
விஜய்,
சிறப்பு...!
(மரத்து என்பது "மறத்து" என்றிருக்க வேண்டும் நண்பா. )
உங்கள் டயரி நல்லாயிருக்கு
@ சத்ரியன்
நண்பா தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
மரத்து போதல் என்றால் உறைந்து போதல்
நன்றி
விஜய்
@ தியாவின் பேனா
தங்களின் முதல் வருகைக்கும் உளமிகு வாழ்த்துக்கும் மிக்க நன்றி
விஜய்
உறைவீட்டில் தற்காலிக ஓய்வும்
சக்கர நாற்காலியில் முதுமையின் ஓய்வும்
தாயின் யுகப்பொறுமையும்
உங்கள் லிபியின் சதுர வரலாறும் மரத்தும் மரித்தும் போகாது மண்ணுள்ளவரை
நன்றி சகோதரா ..
என்னை நினைவூட்டியதற்கும் வரவேற்றதற்கும் ...
ஒரு மாதம் ஷார்ஷா அபுதாபி துபாய் சென்று வந்தேன் என் சகோதரன் இல்லத்துக்கு ...
எனவே தற்போது எல்லவற்றுக்கும் சேர்த்து பின்னூட்டமிட்டு உள்ளேன்
உறைவீட்டில் தற்காலிக ஓய்வும்
சக்கர நாற்காலியில் முதுமையின் ஓய்வும்
தாயின் யுகப்பொறுமையும்
உங்கள் லிபியின் சதுர வரலாறும் மரத்தும் மரித்தும் போகாது மண்ணுள்ளவரை
நன்றி சகோதரா ..
என்னை நினைவூட்டியதற்கும் வரவேற்றதற்கும் ...
ஒரு மாதம் ஷார்ஷா அபுதாபி துபாய் சென்று வந்தேன் என் சகோதரன் இல்லத்துக்கு ...
எனவே தற்போது எல்லவற்றுக்கும் சேர்த்து பின்னூட்டமிட்டு உள்ளேன்
நீண்ட இடைவெளிக்கு பின் தங்கள் வருகை மட்டற்ற மகிழ்வு அளிக்கிறது சகோதரி
தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி
விஜய்
Post a Comment