20.10.09

உறைவீடு



விலை பேசி
 

விற்று முடித்து
 

கத்தைப் பணம் எண்ணி
 

தரகு கமிஷன் தந்து
 

வேகாத வெயிலில்
 

சற்றே இளைப்பாறினேன்
 

விற்ற வீட்டின் நிழலில் .....................................

19 comments:

Anonymous said...

கொடுமை...எதிரிக்கும் வேண்டாம் இந்த நிலை என்றே தோன்றுகிறது...

ஹேமா said...

ஓ...சொல்ல முடியவில்லை.
எனக்குள் சின்ன வயதில் இது மாதிரியான ஒரு வலி இருக்கு.

விஜய் said...

நன்றி தமிழ்

நன்றி ஹேமா

சந்தான சங்கர் said...

பா.ராவின் நிழல்
வலியுடன்...

புரியாமல் எழுதுவதைவிட
இம்முறை கவிக்கு அழகு..

விஜய் said...

நன்றி சங்கர்

எனக்கும் அதுதான் பிடிக்கும் சங்கர்

விஜய்

பா.ராஜாராம் said...

அருமையாய் இருக்கு விஜய்.வேலை பளுக்கள் விஜய்.அதுதான தாமதம்.நல்ல தொணி இக்கவிதை.வலிக்க செய்கிறீர்கள் விஜய்.நன்றி சங்கர்!

*இயற்கை ராஜி* said...

தங்களின் வலைப்பூ அறிமுகத்தை கீழுள்ள முகவரியில் தந்துள்ளேன்.வருகை தந்து தங்கள் கருத்தை தெரிவியுங்கள்
http://blogintamil.blogspot.com/2009/10/blog-post_21.html

விஜய் said...

நன்றி பா.ரா

தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கவும்

விஜய்

விஜய் said...

நன்றி இயற்கை

விஜய்

புலவன் புலிகேசி said...

வலியுடன் நிழலில்...உணர்வுப்பூர்வமான கவிதை...

விஜய் said...

நன்றி புலவன் புலிகேசி

விஜய்

Unknown said...

nalla irukku

velji said...

சிறிது நேரத்தில் நிழலும் நகன்று விடுமே.. உறைவீட்டில்' நினைவுகள் மட்டுமே உறையும்.காலம் காலமாய் தொடரும் வலி!

விஜய் said...

நன்றி வேல்ஜி


விஜய்

அன்புடன் நான் said...

யதார்த்தமான நல்ல கவிதை... வாழ்த்துக்கள்

விஜய் said...

தங்களின் தொடர் வாசிப்பிற்கும் வாழ்த்துக்கும் மிகவும் நான் கடமை பட்டுள்ளேன்.

நன்றி அரசு அவர்களே

விஜய்

இரசிகை said...

vali..........

விஜய் said...

nandri rasigai

vijay

விஜய் said...

" ராமலக்ஷ்மி said...

அருமை "

மிக்க நன்றி

விஜய்