16.10.09

காதல் குவாண்டம் - 1

மாமிசப்பட்சி தாவரம் நீ
 

சிக்கிய வட்டப்புழு நான்
 

மெலிந்த இசையில்
 

சூரியவிழிப்பிற்கு முன்
 

கள்ளுறவு கொண்டோம்
 

என் நிதியிருப்பு அளந்து
 

எதிர் போர் உன்பக்கம்
 

மூளையின் பேசும்பகுதி உறைந்தது
 

பிரிந்தோம் நாம் மணற்துகள்களாய்

14 comments:

ஹேமா said...

ஒவ்வொரு சொல்லும் தேர்ந்தெடுத்து கோர்த்திருக்கிறீர்கள்.

இதுவும் அப்பிடித்தான்.
விளங்குது...விளங்கேல்ல.
நான் விளங்கிக்கொண்டது !

விஜய் said...

நன்றி ஹேமா

கவி அழகன் said...

காதலோ

விபசாரியோ

காதல் தான் என்று நினைகிறன்

velji said...

/மாமிசப்பட்சி தாவரம் நீ/
அரிதான வார்த்தைக்கோர்ப்பு.
அருமையான் கவிதையும் கூட.

Unknown said...

இதிலிருந்து தாங்கள் கூற வரும் கருத்து தான் என்ன - விவாதகன்

Anonymous said...

வார்த்தை புனைவு அருமை..பலப் பொருட்படுமோ கவிதை?

விஜய் said...

நன்றி கவிகிழவன்

காதல்தான்

விஜய் said...

நன்றி ஸ்ரீதர்

தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஒன்றுமில்லை சாதாரண காதல் கவிதை

அவ்வளவுதான்.

விஜய்

விஜய் said...

நன்றி வேல்ஜி

தங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும்.


மிக்க நன்றி.

விஜய்

விஜய் said...

நன்றி சகோதரி.

ஒரே பொருள்தான் சகோதரி

காதல்

மிக்க நன்றி

விஜய்

விக்னேஷ்வரி said...

நீங்களுமா...
கொஞ்சம் எங்க அறிவுக்கும் புரியுற மாதிரி எழுதுங்கப்பா.

சந்தான சங்கர் said...

தீபாவளி முன்னிட்டு
விடுமுறை கவிதைக்கும்..
வந்துவிட்டேன்.
உங்கள் பெயர் சொல்லும் இரு
கவிதைகளும் அழகு.

எப்டி இருக்கீங்க விஜய்
நேசன் வாசம் அடிக்கிது போல..

விஜய் said...

"
விக்னேஷ்வரி said...
நீங்களுமா...
கொஞ்சம் எங்க அறிவுக்கும் புரியுற மாதிரி எழுதுங்கப்பா."


தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விக்னேஷ்வரி

புரியிற மாதிரிதான் எழுதிக்கொண்டு இருந்தேன். ஆதரவே இல்லை. ஆகவே தான் இப்படி. இனிமே புரியிற மாதிரியே எழுதறேன்.

நன்றி

விஜய்

விஜய் said...

சங்கர் தீபாவளி எல்லாம் எப்படி இருந்தது ?

என் கணினி மற்றும் பிராட்பேன்ட் problem

எனவே உடன் பதிலோ பதிவோ எழுத முடியவில்லை.

சரியானதும் எழுதுகிறேன்

நேசன் வாசம் என்பதே மிகப்பெரிய கெளரவம்

நன்றி..