30.10.09

முற்காதல்



உன் 
விழி மின்கசிவு 
இதயத்தீவிபத்து 


கன்னக்கோலக்குழி 
ஆண்மை உறையும் கூடு 


நகமிடுக்கு கருந்துகள் 
புனர்ஜென்ம மருந்தமுதம் 


நாசி வளைகோடுகள் 
ஆயுளின் அட்ச தீர்க்க ரேகைகள்


கருப்பை வடிவக் காதுமடல்
புரளுமிறு மயிர்களில்
உயிரின் ஊசல் 


காமம் மெய்த்தபின் 
காதல் பொய்க்கும் 


உதட்டு சுழியில் 
உன்மத்தம் பிடித்து 
துளி இதழ் விடமருந்தி 
பொய்ப்பது எந்நேரம்........................




22 comments:

Thenammai Lakshmanan said...

கருப்பை வடிவக் காதுமடல்


vow ..!!nice comparison VIJAY..!!

Thenammai Lakshmanan said...

காமம் மெய்த்தபின்
காதல் பொய்க்கும்


உதட்டு சுழியில்
உன்மத்தம் பிடித்து
துளி இதழ் விடமருந்தி
பொய்ப்பது எந்நேரம்........................


superb VIJAY real words

விஜய் said...

நன்றி தோழி

ரொம்ப நாளாகிவிட்டது உங்கள் பாராட்டு பெற்று

விஜய்

நேசமித்ரன் said...

கருப்பை வடிவக் காதுமடல்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அருமை வாழ்த்துக்கள்

விஜய் said...

நன்றி நேசமித்ரன்

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

விஜய்

thiyaa said...

காமம் மெய்த்தபின்
காதல் பொய்க்கும்


உதட்டு சுழியில்
உன்மத்தம் பிடித்து
துளி இதழ் விடமருந்தி
பொய்ப்பது எந்நேரம்........................

//
அருமையான வரிகள்

விஜய் said...

@ தியாவின் பேனா

நன்றி தங்கள் வாழ்த்துக்கும் தொடர் வருகைக்கும்

விஜய்

சந்தான சங்கர் said...

//கருப்பை வடிவக் காதுமடல்//

அருமை விஜய்
நேசனின் வியப்பு புரிகின்றது
படிமத்தின்....
இருமுனைகளின் முதல் முடிச்சாய்
அலைகளின் முதல் மடிப்பாய்,
இளம் கணுவாய்...
இதைத்தான் நேசன் முழுமைப்படுத்தி இருக்கின்றார்
அங்குதான் வாசக மனம் அவிழாமல்
போய்விடுகிறது.
அதற்குதான் அவர் தந்த நரகத்தின் மொழி விளக்கம்.

வாழ்த்துக்கள் விஜய்..

புலவன் புலிகேசி said...

//கன்னக்கோலக்குழி
ஆண்மை உறையும் கூடு

//

அருமையா இருக்கு விஜய்..

விஜய் said...

தங்களின் தொடர் ஊக்கத்திற்கு நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன் சங்கர்

நன்றி

விஜய்

விஜய் said...

தங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி புலவன் புலிகேசி அவர்களே

விஜய்

Thenammai Lakshmanan said...

விஜய்

தங்களின் முதல் கவிதையும் தங்களின் முதல் மருத்துவ வலைப் பதிவும் பார்த்தேன்

முதல் கவிதை பிரமாதம்

மருத்துவ வலைப்பதிவு நன்கு சேவை வழங்க வாழ்த்துக்கள்

ஹேமா said...

விஜய்,ஒவ்வொரு வரி வரியா ரசிச்சு அனுபவிச்சு வர்ணிச்சு இருக்கீங்க.
//காமம் மெய்த்தபின்
காதல் பொய்க்கும்

உதட்டு சுழியில்
உன்மத்தம் பிடித்து
துளி இதழ் விடமருந்தி
பொய்ப்பது எந்நேரம்...//

அப்புறம் போட்டு உடைச்ச மாதிரியுமிருக்கு.

காதுமடல் கருப்பை மாதிரியா இருக்கு !பாக்கணும்.

விஜய் said...

@ தோழி தேனம்மை

நன்றி தோழி தங்களது இடைவிடாத ஊக்கத்திற்கு

விஜய்

விஜய் said...

நன்றி ஹேமா

நீங்கள் தான் எனது முதல் ஊக்குவிப்பாளர்

கருப்பைக்கும் காதுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு

அக்குபங்க்சரில் உடலின் அனைத்து பாகத்திற்கும் குணப்படுத்தும் புள்ளிகள் காதில் உள்ளது.

விஜய்

ஹேமா said...

உங்க அன்புக்கு நிறைந்த நன்றி விஜய்.ஓடியோடி என்னையும் ஊக்கப்படுத்திறீங்களே !

ஓ...அதுவா சங்கதி
கருப்பை- காது.

அன்புடன் நான் said...

யம்மாடியோ... ஒரு புள்ளக்கிட்ட‌ எம்புட்டு ஆராச்சி...

கவிதை வடிவா இருக்குங்க... பாராட்டுக்கள்.

விஜய் said...

@ ஹேமா

மிக்க நன்றி

@ அரசு
ஆராய்ச்சிஎல்லாம் இல்லீங்க அரசு
சும்மா தெரிஞ்சத எழுதினேன்

நன்றி

விஜய்

Thenammai Lakshmanan said...

என் அன்பின் சகோதரர் விஜய்

நான் இது வரையில் மிக நீண்ட இடுகை வெளியிட்டது இதுவே முதல் முறை ...

எனவே தங்களிட்ம் இது பற்றி பின்னூட்டமிட தாமதமாகி விட்டது...

உங்கள் சின்னச் சின்ன வார்த்தைகளால் நீங்கள் சிறப்பாக எழுதுவீர்கள்..

வாழ்த்துக்கள் ..

உங்கள் சகோதரியாக உங்கள் ஆனந்தக் கண்ணீரில் மகிழ்கிறேன்..

விஜய் said...

நன்றி சகோதரி
(இதற்குமேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை)

விஜய்

இரசிகை said...

azhaga irukku...

விஜய் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி rasigai

vijay